RRR Others USA

இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கு வந்ததில்லை.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா.. விற்பனையாளர்களின் BP-யை எகிறவைக்கும் வெள்ளை நிற வைரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக அரிய வகை வெள்ளை நிற வைரம் இந்த மாதம் ஏலத்தில் விற்பனையாக இருக்கிறது. இதனால் வைர விற்பனையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கு வந்ததில்லை.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா.. விற்பனையாளர்களின் BP-யை எகிறவைக்கும் வெள்ளை நிற வைரம்..!

ஒரே இரவில் 26 கேபினெட் அமைச்சர்களும் ராஜினாமா.. என்ன நடக்கிறது இலங்கையில்..?

வைரம்

பூமிக்கடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக உருவாகும் வைரங்கள் இயற்கையாகவே அதிக கடினத்தன்மை கொண்டவையாகும். இவை பட்டை தீட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இவை புதைந்துள்ள மண்ணில் இருக்கும் ரசாயனங்களின் அடிப்படையில் இவற்றின் வண்ணமும் மாறுபடும். உதாரணமாக பிங்க், நீல நிற வைரங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறன்றன. இவற்றுள் வெள்ளை நிற வைர கற்கள் அபூர்வமாக கருதப்படுகின்றன. அதன் காரணமாகவே அவற்றின் விலையும் கணிசமாக இருக்கின்றன.

Rare White Diamond Called The Rock Finally Set For Auction

வெள்ளை நிற வைரம்

20 ஆண்டுகளுக்கு முன்னர், தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்டு பாலிஷ் செய்யப்பட்ட அறிய வகை வைர கல் ஜெனிவாவில் ஏலத்திற்கு வர இருக்கிறது. 'தி ராக்' எனப் பெயரிடப்பட்ட இந்த வைர கல்லை பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டிஸ் விற்பனை செய்ய இருக்கிறது. 228.31 காரட் கொண்ட இந்த அபூர்வ கல், பேரிக்காய் வடிவத்தில் இருக்கிறது.

முன்னதாக துபாயில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வைரம் வரும் மே 11 ஆம் தேதி ஏலத்தில் விடப்பட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Rare White Diamond Called The Rock Finally Set For Auction

எகிறும் விலை

20 ஆண்டுகளாக பாலிஷ் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த இந்த வைர கல் 30 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 226 கோடி ருபாய்) வரையில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முந்தைய சாதனை

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிறிஸ்டி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்ட 163.41 காரட் கொண்ட அரிய வகை வெள்ளை நிற வைரம் 33.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது. இந்நிலையில், வரும் மே மாதம் ஜெனிவாவில் ஏலத்திற்கு வர இருக்கும் தி ராக்  வைரம் உலகம் முழுவதிலும் உள்ள வைர பிரியர்களிடையே கடும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rare White Diamond Called The Rock Finally Set For Auction

முந்தைய சாதனையை தி ராக் வைரம் முறியடிக்குமா என்பது வரும் மே 11 ஆம் தேதி தெரியவரும். இந்த ஏலத்தில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலும் உள்ள வைர வியாபாரிகள் மற்றும் கோடீஸ்வரர்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

"போர் அடிக்குது.. மீன் பிடிக்க போவோம்".. இளைஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வைரல் வீடியோ..!

DIAMOND, WHITE DIAMOND, RARE WHITE DIAMOND, ROCK, AUCTION, வைரம், வெள்ளை நிற வைரம்

மற்ற செய்திகள்