"நான் கண்ணாடி மாதிரி லே.." கடல் நீரில் தென்பட்ட மீன்.. "அட, இதுல இவ்ளோ ஆச்சரியம் இருக்கா??.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பரந்து விரிந்து கிடக்கும் கடல் நீருக்குள் ஏராளாமான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதில், பல உயிரினங்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்து கொண்டிருந்தாலும், இன்னும் பல அரிய நிறுவனங்கள் குறித்து நாம் பெரிதாக தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

"நான் கண்ணாடி மாதிரி லே.." கடல் நீரில் தென்பட்ட மீன்.. "அட, இதுல இவ்ளோ ஆச்சரியம் இருக்கா??.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்

Also Read | "இப்படி யாராவது போன் பண்ணா அதை நம்பிடாதீங்க".. புதுசாக வலை விரிக்கும் கும்பல்.. சென்னை கமிஷனர் எச்சரிக்கை..!

அந்த வகையில், தற்போது அலாஸ்கா பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய வகை மீன் குறித்து கண்டுபிடித்துள்ளது பற்றயும், இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சில அசத்தலான தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அலுஷன் என்ற தீவு ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதியில், மீன் உயிரியலாளர்கள் கடந்த சில தினங்களாக கடல் நீரில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Blotched Snail fish

அப்படி கடல் நீருக்குள் சென்று, அதில் வாழும் மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்வது தான் இவர்கள் வேலை. இதில் உள்ள மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது தான், கண்ணுக்கே தெரியாத வகையில், Transparent போல இருக்கும் மீன் ஒன்று சிக்கி உள்ளது. பார்ப்பதற்கு கண்ணாடி போல இருக்கும் "Blotched Snail fish" தான் அது என்பதும் தெரிய வந்துள்ளது. முன்பே இந்த மீன் கடல் நீரில் உண்டு என்றாலும் அரிதாகவே இவற்றைக் காண முடியும்.

கடல் நீரில், சுமார் 100 முதல் 200 மீட்டர் தொலைவிலேயே இந்த மீன் தென்படுவதால், மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது உள்ளங்கையில் இந்த மீனை வைத்து பார்த்தால், கையின் மறுபக்கம் மீனின் வழியாக தெரியும். மேலும், சிவப்பு நிறத்தில் வட்டம் வட்டமாக இந்த மீனின் மேல்புறம் இருக்கிறது.

rare transparent blotched snail fish found in alaska

மீன் கிட்ட இருந்து தப்பிச்சிடும்..

வெளிச்சத்தின் WaveLength-ஐ குறிப்பிட்டு, இந்த மீன் தனது உடலில் வெளிச்சத்தினை கடத்தி, Transaprent ஆக மாறும் என்பதால், மற்ற மீன்கள் தங்களை தாக்க வந்தால், கண்களுக்கு தெரியாத வகையில் உருமாறி, எளிதில் தங்களைக் காத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இந்த மீனிடம் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதன் Suction Cups உடலின் அடி பாகத்தில் உள்ளது. இதனை பயன்படுத்தி, கடல் அலைகள் வேகமாக வரும் போது, அடித்து போகாமல் இருக்க ஏதேனும் பெரிய பாறையில் ஒட்டிய படியும் இருந்து விடும்.

இப்படி பல வகை சிறப்பம்சங்கள் கொண்ட அரிய வகை மீனான Blotched Snail fish குறித்து நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "இதையா கல்யாணம் செஞ்சுக்க போறீங்க..தெறிச்சு ஓடிய மக்கள்".. இப்படியும் ஒரு திருமண தம்பதி..!

SNAIL FISH, TRANSPARENT SNAIL FISH, ALASKA

மற்ற செய்திகள்