திடீர்னு வானத்துல உருவான கலர்ஃபுல் தோற்றம்.. மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்த வீடியோ.. சீக்ரெட்டை உடைத்த நிபுணர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் சில தினங்களுக்கு முன்னர் வித்தியசமான முறையில் தோற்றம் அளிக்கக்கூடிய வானவில் உருவாகியிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் படுவைரலாக பரவி வருகிறது.

திடீர்னு வானத்துல உருவான கலர்ஃபுல் தோற்றம்.. மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்த வீடியோ.. சீக்ரெட்டை உடைத்த நிபுணர்கள்..!

வானவில்

இயற்கை எப்போதும் நம்மை ஆச்சர்யப்படுத்த தவறுவதே இல்லை. தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு புதிய தகவல்களை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது இயற்கை. அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் சில மாறுதல்கள் எளிதில் மனிதர்களை பெருமளவு கவர்ந்துவிடுவது உண்டு. அப்படியான ஒன்றுதான் வானவில். மழை நேரத்தில் சூரிய ஒளியில் மேகத்தில் உள்ள நீர் துளிகள் மீது பட்டு நிறப்பிரிகை அடைவதே வானவில் எனப்படுகிறது. ஆனால், சீனாவில் சில தினங்களுக்கு முன்னர் உருவான வானவில் உலக மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வைரல் வீடியோ

சையன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ஏலியன் பூமிக்கு வரும் வழி போல உருவான இந்த வானவில்லை பார்த்த உடனேயே மக்கள் வியந்து போயிருக்கிறார்கள். உடனடியாக அந்த அரிய காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட, அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஆகஸ்ட் 21 அன்று சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள ஹைகோ நகரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

வானத்தில் தோன்றிய இந்த வித்தியாசமான தோற்றத்தை 'scarf cloud' மற்றும் 'pileus' என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். ஈரப்பதம் மிகுந்த காற்றில் நீர்த்துளிகள் குளிர்ந்து, பனிக்கட்டியாக மாறும் நேரத்தில் அதன் மீது சூரிய ஒளி படும். அதாவது, ஒரே நேரத்தில் நீர்த்துளிகள் மற்றும் பனிக்கட்டிகள் மீது சூரிய படும்போது இத்தகைய தோற்றம் உருவாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சீனாவில் தோன்றிய இந்த வித்தியாசமான வானவில் பலரையும் கவர்ந்த நிலையில், இந்த வீடியோவை இதுவரையில் 27.3 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்தும் வருகின்றனர்.

 

RAINBOW, SKY, VIDEO, வானவில், வானம், சீனா

மற்ற செய்திகள்