10 வருஷத்துக்கு ஒருமுறை தான் பூக்கும் ... ஆனா Smell சடலத்தை போல துர்நாற்றமா?.. வைரல் ஆகும் நூதன கார்பஸ் பூ.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடுமையாக துர்நாற்றம் வீசக்கூடிய மற்றும் மிகவும் அரிதான கார்ப்பஸ் மலர் அமெரிக்காவில் தற்போது பூத்துள்ளது.

10 வருஷத்துக்கு ஒருமுறை தான் பூக்கும் ... ஆனா Smell சடலத்தை போல துர்நாற்றமா?.. வைரல் ஆகும் நூதன கார்பஸ் பூ.!

Also Read | லாஸ்ட் ஓவரில் பொளந்துகட்டிய தோனி.. "நல்லவேளை எங்க கம்பெனிக்கு இப்படி பேர் வச்சிட்டோம்".. தல மஹியை பாராட்டிய ஆனந்த் மஹி..!

கார்ப்பஸ் மலர்

இந்த வினோத மலரை அறிவியல் உலகில் அமார்போஃபாலஸ் டைட்டானம் என அழைக்கின்றனர். இது அரேசியே மலர் குடும்பத்தைச் சார்ந்தது. சுமார் 3 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த மலர் சராசரியாக 7 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்கிறார்கள் தாவரவியல் வல்லுநர்கள்.

இது அதிகமாக இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் அமைந்துள்ள மலைக் காடுகளில் வளர்கின்றன. 1878 ஆம் ஆண்டு இந்தப் பூவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர்  கண்டுபிடித்திருக்கிறார். அதன்பிறகு உலகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கல்லூரிகளில் இந்த வினோத மலர் செடியை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் தாவரவியலாளர்கள்.

Rare and stinky viral flower bloom at Michigan

கின்னஸ் சாதனை

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள போன் பல்கலைக்கழகத்தில் பூத்த கார்ப்பஸ் மலர், உலகின் மிகப்பெரிய கார்ப்பஸ் மலர்களுள் ஒன்றாகும். இதற்காக அந்த பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்ட விழாவே ஏற்பாடு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஜெர்மனியில் பூத்த இந்த மலர் 10 அடி 5 அங்குலம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கடந்த 2010 ஆம் ஆண்டு பூத்த கார்ப்பஸ் மலர் 10 அடி 2 அங்குலம் உயரத்திற்கு வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Rare and stinky viral flower bloom at Michigan

துர்நாற்றம்

இத்தனை வரலாறுகளை தன்னிடத்தே கொண்ட இந்த அரிய மலர் பூக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசும். இந்த மலர் பூக்கும் வேளையில் சடலத்தை போல வாசனை வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Rare and stinky viral flower bloom at Michigan

உலகம் முழுவதும் அழிந்து வரும் செடிகளின் பட்டியலில் உள்ள இந்த கார்பஸ் மலர்ச் செடி அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தச் செடியில் தற்போது கார்ப்பஸ் மலர் பூக்கத் துவங்கியுள்ளது. வழக்கமாக செடி முளைத்து 10  ஆண்டுகளில் இந்தப்பூ பூக்கும் நிலையில் இங்கே 7 வருடத்தில் பூ பூக்கத் தொடங்கிவிட்டது.  கடுமையான துர்நாற்றத்திற்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் இந்த மலரை அதிசயத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

VIRAL FLOWER, VIRAL FLOWER BLOOM, MICHIGAN, USA, கார்பஸ் பூ, கார்ப்பஸ் மலர்

மற்ற செய்திகள்