RRR Others USA

2.2 கோடிக்கு ஏலம்போன பிரபல ராப் பாடகரின் லவ் லெட்டர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல ராப் பாடகரான டுபக் அமரு ஷகுர் (Tupac Amaru Shakur) -ன் கடிதங்கள் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2.2 கோடிக்கு ஏலம்போன பிரபல ராப் பாடகரின் லவ் லெட்டர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

ஒரே இரவில் 26 கேபினெட் அமைச்சர்களும் ராஜினாமா.. என்ன நடக்கிறது இலங்கையில்..?

டுபக் அமரு ஷகுர்

அமெரிக்காவின் நியூயார்க் நகர ஹார்லெமில் பிறந்தவர் டுபக் அமரு ஷகுர். 1960கள் மற்றும் 1970களில் பிளாக் பாந்தர் கட்சியின் தீவிர உறுப்பினர்களான அஃபெனி ஷகுர் மற்றும் பில்லி கார்லண்ட் ஆகியோரின் மகனான இவர் இளம் வயது முதலே, ஹக்கூ மற்றும் கடிதங்கள் எழுதுவதில் திறமையானவராக இருந்தவர்,

இசை மற்றும் பாடுவதில் ஆர்வமாக இருந்த டுபெக்கின் வாழ்க்கை பல திருப்புமுனைகளை கொண்டது. எதிர்பாராத விதமாக தன்னுடைய 25வது வயதில் டுபெக் மரணமடைந்தார்.

Rapper Tupac teenage love letters sold at auction

ஏலம்

இந்நிலையில் தன்னுடைய இளம் வயதில் டுபெக் எழுதிய கடிதங்கள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Sotheby's ல் ஏலத்திற்கு வந்தன. அவற்றுள் 11 வயதில், டுபெக்,  பிளாக் பாந்தர் கட்சியுடன் செயல்பட்டதால் சிறையில் இருந்த தனது காட்பாதருக்கு ஹைக்கூக்களை எழுதினார். "டுபக் ஷகுர், எதிர்கால சுதந்திரப் போராளி" என்று கையெழுத்திடப்பட்ட ஹைக்கூக்களின் கையெழுத்துப் பிரதி ஏலத்தில் $302,400 (இந்திய மதிப்பில் 2.2 கோடி ரூபாய்) க்கு விற்கப்பட்டது.

Rapper Tupac teenage love letters sold at auction

காதல் கடிதங்கள்

டுபெக் தன்னுடைய இளம் வயதில் எழுதிய காதல் கடிதங்களும் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. இவை கோசிமா என்ற பெண்ணிடம் இருந்து பெறப்பட்டவை என தெரியவந்திருக்கிறது. அவற்றுள் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்-ற்கு அப்போது டுபெக் எழுதிய கடிதங்களும் இருந்திருக்கின்றன.

மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தன்னுடைய இசை வாழ்க்கை குறித்து அவர் பல்வேறு காலங்களில் எழுதிய கடிதங்களை அவரது ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியுள்ளனர்.

கார்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டுபெக்கின் மறைவு இசை உலகையே அதிரவைத்தது. வாகனத்தில் செல்லும்போது சுடப்பட்ட டுபெக், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் கடைசியாக பயணித்த கார் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏலத்திற்கு வந்தது. டுபெக் பயன்படுத்திய கடைசி கார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 11 கோடி) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Rapper Tupac teenage love letters sold at auction

இந்நிலையில் டுபெக் எழுதிய கடிதங்கள் ஏலத்தில் விற்பனையாகி இருப்பது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

"போர் அடிக்குது.. மீன் பிடிக்க போவோம்".. இளைஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வைரல் வீடியோ..!

TUPAC SHAKUR, RAPPER TUPAC, TEENAGE LOVE LETTERS, SOLD, AUCTION, லவ் லெட்டர், டுபக் அமரு ஷகுர், ராப் பாடகர்

மற்ற செய்திகள்