Breaking: இலங்கையின் புதிய அதிபர் யார்.?.. தேர்தல் முடிவுகளை வெளியிட்டது நாடாளுமன்றம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Breaking: இலங்கையின் புதிய அதிபர் யார்.?.. தேர்தல் முடிவுகளை வெளியிட்டது நாடாளுமன்றம்..!

Also Read | உலகத்தின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்களின் List.. இத மட்டும் வச்சிருந்தா 193 நாட்டுக்கு விசாவே எடுக்க வேண்டாமாம்.. இந்தியாவின் ரேங்க் என்ன?

போராட்டம்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

தப்பிய அதிபர்

இதனிடையே பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய, திடீரென தனது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். இதனால் பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே-வை நியமித்திருந்தார் கோத்தபய. இதனை தொடர்ந்து, சவூதி அரேபிய விமானம் மூலமாக சிங்கப்பூர் சென்றடைந்த கோத்தபய தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதனை இலங்கை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை அடுத்து இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.

Ranil Wickremesinghe elected as the new president

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளையும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் இடதுசாரி வேட்பாளரான அனுர திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலமாக பெரும்பான்மையுடன் இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரணில் விக்ரம சிங்கே.

இதனை தொடர்ந்து பேசிய அவர், "நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. எங்களுக்கு முன்னால் பெரிய சவால்கள் உள்ளன" என்றார். இலங்கையின் இடைக்கால அதிபராக இருந்த ரணில், இன்று நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருப்பது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | கல்யாணம் ஆகி 17 வருஷத்துக்கு அப்பறம் மனைவி மீது வந்த சந்தேகம்.. கணவர் செஞ்ச காரியத்தால் கலங்கிப்போன உறவினர்கள்..!

SRILANKA, RANIL WICKREMESINGHE, SRILANKA NEW PRESIDENT, இலங்கை, ரணில் விக்ரமசிங்கே

மற்ற செய்திகள்