அப்டித்தான் 'பண்ணுவோம்'... உங்களால 'முடிஞ்சத' பாத்துக்கங்க... கெத்து காட்டும் இந்தியா!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் எதிர்ப்பை மீறி எல்லைப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்திருக்கிறது.
இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் எல்லைப்பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் சீனா சமீபகாலமாக இந்திய எல்லைகளை சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் ராணுவத்தை வைத்து முறையற்ற தாக்குதல்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் இந்தியா சாலை அமைப்பதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்தது. தற்போது இருதரப்பு ராணுவத்தினரும் அடிக்கடி மோதிக்கொள்வதால் இந்தியா சாலை பணிகளை நிறுத்தி வைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சீனாவின் எதிர்ப்பை மீறி எல்லைப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை தொடர இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. லடாக், சிக்கிம், உத்தரகாண்ட், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் எல்லைக்கோடு அருகே நடந்து வரும் எந்த கட்டமைப்பு பணிகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என்று ராணுவ தலைமைக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.
மற்ற செய்திகள்