புதினை 'அங்கிள்' ன்னு கமெண்ட் அடித்த பெண்.. அடுத்தநாள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அங்கிள் என அழைத்த ரேடியோ தொகுப்பாளர் ஒருவரை பணி நீக்கம் செய்திருக்கிறது கஜகஸ்தான் ஊடகம் ஒன்று.
போர்
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.
இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது.
கஜகஸ்தான்
முன்னாள் சோவியத் குடியரசான கஜகஸ்தான், ரஷ்யாவுடன் உலகின் இரண்டாவது மிக நீளமான நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டுள்ளது. ரஷ்ய தலைமையிலான வர்த்தக மற்றும் இராணுவ முகாம்களில் உறுப்பினராகவும் கஜகஸ்தான் உள்ளது.
பணி நீக்கம்
இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டில் இயங்கிவரும் Europa Plus Kazakhstan ரேடியோ ஸ்டேஷனில் பணிபுரிந்துவந்த லியூபோவ் பவோனா என்னும் பெண் தொகுப்பாளர் பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் "ஓவராக பேசினால் வோவோ அங்கிளை கூப்பிட வேண்டியிருக்கும்" என கமெண்ட் போட்டிருக்கிறார்.
ரஷ்ய அதிபரை தான் பவோனா வோவோ என்று குறிப்பிட்டதாக கருதுகின்றனர் கஜகஸ்தான் மக்கள். இந்நிலையில், அடுத்த நாளே பவோனாவை பணி நீக்கம் செய்திருக்கிறது அந்த ரேடியோ ஸ்டேஷன். அவருடைய பணி ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
குற்றம்
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து வெறுப்பை விதைக்கும் வகையில் கஜகஸ்தான் மக்கள் பேசக்கூடாது எனவும் அது நாட்டின் சட்டப்படி குற்றம் எனவும் துணை வழக்கறிஞர் ஜெனரல் புலாட் டெம்பாயேவ் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அங்கிள் என கமெண்ட் அடித்த ரேடியோ தொகுப்பாளரை அந்த நிறுவனம் அடுத்தநாளே பணிநீக்கம் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்