'என்னங்கடா, கிச்சன்ல ஸ்டவ் எரியுது, கடாய்ல சிக்கன் இருக்கு'... 'வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண்'... வீட்டின் கூரையில் கண்ட அதிர்ச்சி ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண், கிட்சனில் தானாக ஸ்டவ் எரிந்துகொண்டிருந்ததையும், சிக்கன் வெந்துகொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவத்தின் பின்னணியில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

'என்னங்கடா, கிச்சன்ல ஸ்டவ் எரியுது, கடாய்ல சிக்கன் இருக்கு'... 'வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண்'... வீட்டின் கூரையில் கண்ட அதிர்ச்சி ட்விஸ்ட்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வருபவர் மோனிகா கிரீன். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே, தனது வீட்டில் வைத்த பொருட்கள், வைக்கப்பட்ட இடத்தில் இல்லை. அவ்வப்போது இடம் மாறிக் கொண்டிருந்ததை மோனிகா கவனித்து வந்துள்ளார்.

queensland woman shocks discovering intruder living in home ceiling

தன்னுடைய குழந்தைகள் தான் இப்படி செய்திருப்பார்கள் என எண்ணி அவர்களை மோனிகா கண்டித்துள்ளார்.

ஆனால், கடந்த திங்கட்கிழமை அன்று, டாக்டரை சந்தித்துவிட்டு முன்னதாகவே வீடு திரும்பிய மோனிகாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் பின் புறக் கதவு திறந்திருந்தது; டிவி ஓடிக்கொண்டிருந்தது; பாதி சமைத்த உணவும், கடாயில் சிக்கனும் வெந்துகொண்டிருந்தது.

இதைக் கண்டு பதறிப்போன மோனிகா, உடனடியாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.

வீட்டை வந்து சோதனையிட்ட போலீசார், மோனிகா வீட்டின் மேற்பகுதி சுவற்றில் (ceiling) மிகப்பெரிய ஓட்டை இருந்ததை கண்டுபிடித்தனர்.

queensland woman shocks discovering intruder living in home ceiling

மேலும், துளையிடப்பட்ட அந்த பகுதியில், யாரோ ஒருவர் நீண்ட காலமாக வசித்து வருவதற்கான தடயங்கள் சிக்கின.

இவற்றைப் பார்த்து, வேர்த்து விறுவிறுத்துப் போனார் மோனிகா. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "இத்தனை நாட்களாக நம் வீட்டில் பதுங்கியிருந்தது யார்? அவருடைய நோக்கம் என்ன?" போன்ற பல்வேறு கேள்விகள் அவர் மனதில் ஒலித்துள்ளது.

தன்னுடைய அன்றாட செயல்பாடுகளை நேரத்துடன் துள்ளியமாக, வீட்டில் உள்ள ஒரு வெள்ளை போர்டில் குறித்து வைப்பது மோனிகாவின் பழக்கம். அதைப் புரிந்து கொண்டு, அந்த time table அடிப்படையில் நீண்ட காலமாக ஒரு மர்ம நபர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வழக்கை பதிவு செய்த காவல்துறையினர், அந்த மர்ம நபரை பிடிக்கும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்