ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த ராணி எலிசபெத், தன்னுடைய 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.

ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??

Also Read | "அட, இதுவா இம்புட்டு லட்ச ரூபா'க்கு ஏலம் போச்சு??".. ராணி எலிசபெத் Use செய்த பொருள்.. விலை'ய கேட்டா தலையே சுத்தும்!!

முன்னதாக, ராணி எலிசபெத் இறப்பதற்கு ஒரு சில தினங்கள் முன்பாகவே, அவரது உடல்நிலை சற்று மோசமாக இருந்ததாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது 96 ஆவது வயதில், ராணி எலிசபெத் காலமானார். அதிக ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தவர் என்ற பெருமையும் எலிசபெத் வசம் தான்.

Queen elizabeth which cannot be opened for next 63 years

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர். மேலும், செப்டம்பர் 19ஆம் தேதி ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தற்போது ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் ராணி எலிசபெத் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி மக்கள் பலரையும் வியப்படையச் செய்து வருகிறது. அந்த வகையில், ராணி எலிசபெத் எழுதிய கடிதம் தொடர்பான செய்தி தற்போது பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. ராணி எலிசபெத் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டிடத்தில் ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

Queen elizabeth which cannot be opened for next 63 years

மேலும் அங்கே உள்ள சதுர சதுர வடிவ பெட்டிக்குள் கடிதம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மேயிருக்கு ராணியின் கைப்பட எழுதி இருந்த கடிதத்தை 2085 ஆம் ஆண்டு பொருத்தமான தினத்தில், பிரித்து சிட்னி நகரவாசிகளுக்கு செய்தியை வழங்க வேண்டும் என்றும் எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு ராணி எலிசபெத் எழுதியிருந்த இந்த கடிதம், ராணி விக்டோரியா கட்டிடத்தில்  வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மிகவும் பத்திரமாக அந்த கடிதம் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் வாக்கை ஏற்று அடுத்த 63 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது தெரிய வரும் என்பதால், அதுவரை அவர் என்ன எழுதி இருப்பார் என்பது மர்மமாக தான் இருக்கும்.

Queen elizabeth which cannot be opened for next 63 years

அது மட்டுமில்லாமல், ராணி எலிசபெத் அந்த கடிதத்தில் என்ன எழுதி உள்ளார் என்பது அவரது தனிப்பட்ட ஊழியர்களுக்கும் கூட தெரியாது என்றும் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகள் கழித்து சிட்னி மக்களுக்கு ராணி எலிசபெத் சொல்ல நினைத்த விஷயம் எதை பற்றியதாக இருக்கும் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.

Also Read | "எதே.. ? 31 ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்துருக்கா".. சொல்லவே இல்ல.. ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்!!

QUEEN ELIZABETH, ராணி எலிசபெத்

மற்ற செய்திகள்