96 வயதில் இங்கிலாந்து எலிசபெத் ராணி மரணம்!.. இரங்கல் தெரிவிக்கும் உலக நாடுகள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் உள்ள இரண்டாம் எலிசபெத் ராணியின் உடல்நிலை குறித்து கடந்த சில மணி நேரமாகி தகவல் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் ராணியான எலிசபெத்திற்கு தற்போது 96 வயதாகிறது. கடந்த ஒரு ஆண்டாகவே, அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும், அரசு மற்றும் பொது நிகழ்ச்சி பலவற்றிலும் ராணி எலிசபெத் பங்கெடுத்து வந்தார்.
இதனிடையே, கடந்த ஒரு சில தினங்களாகவே ராணி எலிசபெத்தின் உடல்நிலை மோசமாக இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. அது மட்டுமில்லாமல், மருத்துவர்கள் தொடர்ந்து அவரை மீட்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவரது உடல்நிலை தேறாமல், தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.
இதன் காரணமாக, பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி எலிசபெத் தங்கி இருந்த அரண்மனைக்கு இளவரசர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் பலரும் வர தொடங்கி இருந்தனர். அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது ராணி எலிசபெத் மறைந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
96 வயதில், ராணி எலிசபெத் மறைந்த நிலையில், பிரிட்டன் மக்கள் அவருக்கு அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். அதே போல, உலக நாடுகளை சேர்ந்த மக்களும் ராணி எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்