பல வருஷமா இங்கிலாந்து ராணி பாதுகாத்துவந்த விலைமதிக்க முடியாத பொக்கிஷம்.. இனி இவருக்குத்தானாம்.. சுவாரஸ்ய பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் முக்கிய பொக்கிஷங்கள் கமீலாவிற்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் ராணி
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், இன்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. இங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிரீடம்
ராணியின் மறைவையடுத்து, அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் தற்போது அரசாட்சியை ஏற்றிருக்கிறார். இந்நிலையில், ராணியின் பொக்கிஷங்களாக கருதப்படும் கிரீடம், உள்ளிட்ட பாரம்பரிய நகைகள் யாருக்கு அளிக்கப்படும்? என உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில், இந்த நகைகளில் பெரும்பாலானவை சார்லஸின் மனைவி கமீலாவிற்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நகைகளில் முக்கியமானது இரண்டாம் எலிசபெத்தின் வைர கிரீடம். முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே ராணி அதனை அணிவார். இந்த கிரீடத்தை இதுவரையில் விக்டோரியா மகாராணி, அலெக்ஸ்சாண்டிரா, மேரி மற்றும் இரண்டாம் எலிசபெத் ஆகிய நான்குபேர் மட்டுமே அணிந்திருக்கிறார்கள். இந்நிலையில், சார்லஸ் தற்போது அரசாகி இருப்பதால் இந்த கீரிடம் அவருடைய மனைவிக்கு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
கேட் மிடில்டன்
அவருக்கு பிறகு, வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு இந்த கிரீடம் வந்துசேரும். அதாவது இங்கிலாந்து அரசராக வில்லியம் பதவியேற்கும் நாளில் கேட் மிடில்டன் இந்த கிரீடத்தை அணிவார் எனச் சொல்லப்படுகிறது. 1820 களில் அப்போதைய மன்னர் நான்காம் ஜார்ஜ் இந்த கிரீடத்தை உருவாக்கினார். இதில் 23,578 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு 8 லட்சம் பவுண்டுகள் ஆகும்.
மற்ற செய்திகள்