96 வயதில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் .. இறக்கும் முன் எப்படி இருந்தாங்க.. வைரலாகும் கடைசி ஃபோட்டோ..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன் தினம் (செப்.8) மறைந்தார். பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த இவர், தனது 96வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

96 வயதில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் .. இறக்கும் முன் எப்படி இருந்தாங்க.. வைரலாகும் கடைசி ஃபோட்டோ..

இறக்கும் முன் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தான் ராணி இரண்டாம் எலிசபெத் தங்கியிருந்தார். ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை நியமித்தார். ராணி எலிசபெத் நியமித்த 15-வது பிரதமர்தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Queen Elizabeth II last photo before she dies breaks internet

இந்த சமயத்தில்தான் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்சுடன் கைகுலுக்குவது போன்றும், நெருப்பூட்டி குளிர் காயும் இடத்தில் போஸ் கொடுத்து நின்றும் பால்மோரல் அரண்மனையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் படம் பிடிக்கப்பட்டார். தடிக்கோல் உதவியுடன், சிரித்தபடி நின்று ராணி எலிசபெத் கொடுத்த இந்த போஸை ஜேன் பர்லோ என்ற போட்டோகிராபர்தான் கடைசியாக படம் பிடித்தார்.

இந்த ஃபோட்டோதான் மறைந்த ராணி எலிசபெத்தின் கடைசி ஃபோட்டோவாக வைரலாகி வருகிறது.

QUEEN ELIZABETH II

மற்ற செய்திகள்