ராணி எலிசபெத் உடல்நிலை பற்றி வெளியான தகவல்.. அரண்மனைக்கு விரையும் உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் உள்ள இரண்டாம் எலிசபெத் ராணியின் உடல்நிலை குறித்து தற்போது வெளிவந்துள்ள தகவல், உலகளவில் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

ராணி எலிசபெத் உடல்நிலை பற்றி வெளியான தகவல்.. அரண்மனைக்கு விரையும் உறவினர்கள்!

பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு தற்போது 96 வயதாகிறது. இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல, நடப்பதற்கும் நிற்பதற்கும் சிரமப்படும் ராணி எலிசபெத், கைத்தடியுடன் வலம் வருகிறார்.

அவ்வப்போது, ராணி எலிசபெத் உடல்நிலை சரியில்லை என தகவல் வெளியானாலும், ஏராளமான அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு பெற்று வந்தார்.

சமீபத்தில் கூட, பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் ராணி எலிசபெத் காலாந்து கொண்டிருந்தார். மேலும், இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள லிஸ் டிரஸ்ஸை சந்தித்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

Queen elizabeth health reports family visiting palace

அப்படி இருக்கையில், கடந்த இரண்டு தினங்களாக ராணி எலிசபெத் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மூத்த அரசியல்வாதிகளுடன் ராணி எலிசபெத் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை காரணமாக இந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Queen elizabeth health reports family visiting palace

பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி எலிசபெத் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம் ஆகியோர் அரண்மனைக்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, ராணி எலிசபெத்தின் ராஜ குடும்பத்து உறவினர்களும் அரண்மனைக்கு வந்த வண்ணம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது.

அதே போல, இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் கூட ராணி எலிசபெத் உடல்நிலை குறித்து ட்வீட் ஒன்றையும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

QUEEN ELIZABETH

மற்ற செய்திகள்