ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் கார்.. "அட, இதுக்கு பின்னாடி இப்டி ஒரு சம்பவம் இருக்கா??"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் கார்.. "அட, இதுக்கு பின்னாடி இப்டி ஒரு சம்பவம் இருக்கா??"

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, இத்தனை நாட்கள் அரசு மரியாதை படி, ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

queen elizabeth car used in final rites partly designed by queen

விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், இறுதி சடங்கிற்காக ராணி எலிசபெத் உடல் எடுத்து செல்லப்பட்ட ஜாகுவார் கார் குறித்து சில சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

queen elizabeth car used in final rites partly designed by queen

ஸ்காட்லாந்தின் பால்மோரல் பகுதியில் ராணி உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை லண்டனுக்கு எடுத்துச் செல்ல Mercedes-Benz பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் ராணி எலிசபெத் ஊர்வலத்திற்கு முழுக்க முழுக்க அரச குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் ராணியால் ஓரளவு வடிவமைக்கப்பட்ட ஒரு கஸ்டம் டிசைன்டு ஜாகுவார் வாகனம் தான் பயன்படுத்தப்பட்டது.

மேலும் இந்த கார் குறித்து வெளியான தகவல்களின் படி, ராணி இறப்பதற்கு முன் இந்த வாகனத்தின் வடிவமைப்பு திட்டம் பற்றி அவரிடம் ஆலோசிக்கப்பட்டு இறுதி மாதிரிக்கும் அவரே ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் துக்கம் அனுசரிப்பவர்கள், அஞ்சலி செலுத்துபவர்கள் என அனைவரும் சவப்பெட்டியை தெளிவாக பார்க்கும் படி உயரமாகவும், பெரிய கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, சவப்பெட்டி நன்றாக தெரியும் படி ஸ்பாட் லைட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் இரு பக்கங்களிலும் ராணியின் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

queen elizabeth car used in final rites partly designed by queen

அதே போல, ராணிக்கு ஜாகுவார், டைம்லர்ஸ் மற்றும் லேண்ட் ரோவர் உள்ளிட்ட கார்கள் மிகவும் பிடித்தமான கார்களாக இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

QUEEN ELLIZABETH, FUNERAL, JAGUAR CAR

மற்ற செய்திகள்