“எங்க கிட்ட வாங்குற Gas-க்கு பணத்தை கொடுங்க.. ஆனா ஒரு கண்டிஷன்..” ரஷ்யாவை எதிர்த்த நாடுகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த புதின்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நட்பு நாடுகள் பட்டியலில் இல்லாத நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்று வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் ரஷ்யா இந்த போரை நடத்தி வருகிறது. அதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
ஆனாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்களது நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளை ரஷ்யா நீக்கியுள்ளது.
தற்போது பல நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு சரிந்துள்ளது. அதனால் அந்நாடு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் தங்களிடம் எரிவாயு வாங்கும் நட்பு நாடுகள் பட்டியலில் இல்லாத நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் ரஷ்யாவின் பணமான ரூபிளியாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரூபீள் பணம் விரைவில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் நாட்டு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இருந்தபோதிலும், அ ந்நாட்டிடம் இருந்து தொடர்ந்து இயற்கை எரிவாயுவை வாங்கி வருகின்றனர். தற்போது புதினின் இந்த அறிவிப்பால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் பணத்தை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்