Kadaisi Vivasayi Others

பொதுமேடையில் அசிங்கப்பட்ட அழகி.. இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு.. யார் இந்த புஷ்பிகா டி செல்வா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

'திருமதி இலங்கை 2021’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர் புஷ்பிகா டி சில்வா. கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, 'திருமதி இலங்கை அழகி' ஆக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த 'திருமதி உலக அழகி'  போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷைவின் போர்டு 'திருமதி உலக அழகி' பட்டத்தை வென்றார்.

பொதுமேடையில் அசிங்கப்பட்ட அழகி.. இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு.. யார் இந்த புஷ்பிகா டி செல்வா?

புஷ்பா டி செல்வா குற்றச்சாட்டு

இந்த போட்டியில் நடுவர்கள் முறைகேடாக செயல்பட்டதால்தான் தனக்கு வெற்றி கிட்டவில்லை என சமூகவலைதள பக்கத்தில் புஷ்பா டி செல்வா குற்றம்சாட்டினார. அவரது இந்த கருத்து உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கையின் நற்பெருக்கு கலங்கம் விளைவிப்பதாக இலங்கையின் போட்டி அமைப்பாளர் தெரிவித்திருந்தார்.  இதன் பின்பு புஷ்பிகா டி சில்வாவின் 'திருமதி இலங்கை' பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பட்டத்தை விளம்பரங்களுக்காக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Pushpika de Silva Mrs. Sri Lanka Beauty Degree Flush

திருமதி இலங்கை பட்டம் பறிப்பு

இந்நிலையில், எனினும், உலக அழகி போட்டியில் கிரீடத்தை பெற்ற  கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார். கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியது.  இச்சம்பவம் குறித்து கரோலினா ஜூரி கூறியதாவது, "புஷ்பிகா போட்டிக்கான விதிமுறையை மீறி விட்டார். இந்த போட்டியில் திருமணம் ஆனவர்தான் பங்கேற்க வேண்டும். ஆனால், புஷ்பிகா விவகாரத்தானவர்" என்று கூறினார்.  கரோலின் ஜுரியின் செயலுக்கு பலரும் எதிர் கருத்துகள் தெரிவித்தனர்.

புஷ்பிகா டி செல்வா கருத்து

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பிகாகா, "தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க போவதில்லை. நீதி என்றாவது ஒரு நாள் வெல்லும். திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளனர். இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளேன். தனக்கு விவாகரத்து ஆகவில்லை. கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறேன் என்று புஷ்பிகா விளக்கம் அளித்தார். 

Pushpika de Silva Mrs. Sri Lanka Beauty Degree Flush

இதனையயடுத்து,‘திருமதி இலங்கை’ பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரிடம் இருந்து மீண்டும் 'திருமதி இலங்கை' பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

PUSHPIKA DE SILVA, SRILANKAN BEAUTY, MR SRI LANKAN, MARRIED GIRL

மற்ற செய்திகள்