ஏர்போர்ட் பாத்ரூமில் நாய்க்குட்டி.. கூடவே இருந்த லெட்டர்.. படிச்சு பாத்துட்டு கண்கலங்கிய அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் விமான நிலைய பாத்ரூமில் இருந்து குட்டி நாய் ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் இருந்த கடிதம் தான் பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

ஏர்போர்ட் பாத்ரூமில் நாய்க்குட்டி.. கூடவே இருந்த லெட்டர்.. படிச்சு பாத்துட்டு கண்கலங்கிய அதிகாரிகள்..!

Also Read | நண்பன் மரணமடைந்த சோகம்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் பரமக்குடி..!

அந்த விமான நிலையம் வழக்கம்போல பரபரப்புடன் தான் அன்றும் இருந்தது. விமானத்திற்கு காத்திருந்த பெண்மணி ஒருவர், இயற்கை உபாதைக்காக அங்குள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒரு கழிவறையில் நாய்க்குட்டியின் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே பதறிப்போன அவர் கதவை திறக்க உள்ளே பிறந்து 3 மாதங்களே ஆன, நாய்க்குட்டி இருந்திருக்கிறது. கூடவே ஒரு கடிதமும். இதனால் குழம்பிய அந்த பெண்மணி கடிதத்தை பிரித்துப் பார்த்திருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் அவரை கண்ணீர் சிந்த வைத்திருக்கின்றன.

கடிதம்

நாயுடன் இருந்த கடிதத்தில்,"வணக்கம். எனது பெயர் செவி. எனது உரிமையாளர் தவறான நபருடன் உறவில் இருந்ததால் என்னை விமானத்தில் ஏற்றிச் செல்ல அவரால் முடியவில்லை. அவள் முழு மனதுடன் என்னை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிச்சியடைந்த அவர் அதே கடிதத்தின் பின்பகுதியில் இருந்தவற்றையும் படித்திருக்கிறார்.

Puppy abandoned in airport bathroom with heartbreaking note from owner

அதில்,"நாங்கள் சண்டையிட்டபோது எனது முன்னாள் காதலன் என் நாயை தாக்கினார். எனது அன்புக்குரிய நாய்க்கு மருத்துவர் உதவி தேவைப்படலாம். நான் செவியை மிகவும் நேசிக்கிறேன். தயவுசெய்து அவரை நேசிக்கவும், கவனித்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீட்பு

தனது முன்னாள் காதலனிடமிருந்து தனது நாயை காப்பாற்ற முடிவெடுத்த அந்த பெண், வேறு வழியின்றி விமான நிலைய பாத்ரூமில் தனது நாயை விட்டுச் சென்றதை அறிந்த பெண்மணி உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளை அழைத்திருக்கிறார். இதன் மூலம் லாஸ் வேகாஸில் உள்ள கானர் மற்றும் மில்லியின் நாய் மீட்பு மையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள்.

Puppy abandoned in airport bathroom with heartbreaking note from owner

இதனையடுத்து மீட்பு மைய ஊழியர்கள் செவியை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த விஷயம் சமூக வலை தளங்களில் பரவ, செவியின் மருத்துவ செலவுகளுக்கு பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

Also Read | "என் அப்பா பக்கத்துல இருக்க மாதிரி தோணுது".. இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் போட்ட திட்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ..!

AIRPORT, PUPPY, PUPPY ABANDONED IN AIRPORT BATHROOM, OWNER

மற்ற செய்திகள்