ஐயோ, ரெண்டு 'கை' பத்தாது போலையே...! 'சாலையில் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்...' சந்தோஷத்தில் 'துள்ளி' குதித்தவர்களுக்கு காத்திருந்த ஆப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வாகனத்தில் இருந்து பறந்த வந்த லட்ச கணக்கான அமெரிக்க டாலரை பொதுமக்கள் எடுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதியில் வங்கியில் இருந்து பணத்தை FBI-க்கு வேன் மூலம் எடுத்து சென்றுள்ளனர். அப்போது தீடீரென வாகனத்தின் கதவு திறந்தததால் வண்டியில் மூட்டைகளாக கட்டப்பட்ட லட்ச கணக்கான அமெரிக்க டாலர் கரன்சி அனைத்தும் காற்றில் பறந்துள்ளது.
என்னடா இது வானத்தில் இருந்து சாலையில் பணம் பறக்கிறது என அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நடுவழியில் விட்டுவிட்டு ஆர்வமாக ஓடோடி வந்து பணத்தை அள்ளி சென்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வு குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.
அதோடு, பணத்தை அள்ளிகொண்டிருந்த மக்களிடம் இது அரசாங்க பணம் எனவும் இதனை கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என அறிவித்து அங்கிருந்த மக்களிடம் பணத்தை பிடிங்கியுள்ளனர். ஆனால் போலீசார் வருவதற்கு முன்பு பணத்தை கொண்டு சென்ற மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, அந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மூலம் பணத்தை திரும்பப் பெறும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். பணத்தை எடுத்து திரும்பி செலுத்தாமல் போனால் அவர்கள் மீது கிரிமினல் குற்றம் பாயும் என எச்சரித்ததோடு, இந்த சம்பவத்தில் பணத்தை எடுத்து சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்