'டிரம்ப் தோற்று போவாருன்னு கட் & ரைட்டாக கணித்தவர்'... 'கொரோனா எப்போது போகும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கணிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து நாட்டின் லண்டனைச் சேர்ந்தவர் Nicolas Aujula. மனோதத்துவ நிபுணரும், எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர் எனவும் பெயர் பெற்றவர். அவர் கணித்தவற்றில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது, அமெரிக்க அதிபர் தேர்தலாகும். அதில் அதிபர் டிரம்ப் தோல்வியைத் தழுவுவார் என Nicolas முன்கூட்டியே கணித்திருந்தார். தனது கடந்த காலம் குறித்தும் எனக்குத் தெரியும் எனக் கூறியுள்ள, Nicolas கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்தும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

'டிரம்ப் தோற்று போவாருன்னு கட் & ரைட்டாக கணித்தவர்'... 'கொரோனா எப்போது போகும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கணிப்பு!

அதன்படி 2022 வரை கொரோனா இருக்கும் எனத் தனது கணிப்பு தெரிவிப்பதாக Nicolas கூறியுள்ளார். உலகம் முழுவதும் மாமிசம், மற்றும் கால்நடை தொடர்புடைய பேரழிவைப் பார்த்ததாகக் கூறும் Nicolas, கொரோனா சீனாவின் மாமிச சந்தையிலிருந்து'பரவியதாக ஒரு கருத்து நிலவி வரும் நிலையில் Nicolas கூறிய கருத்து இங்கு நினைவு கூறத்தக்கது.

2010ம் ஆண்டுக்கு முன்பே மருத்துவமனைகள் தீபற்றி எரிவதைப் போன்ற தரிசனத்தைப் பார்த்ததாகக் கூறும், Nicolasயின் கணிப்பு கொரோனவால் மருத்துவமனையில் மருத்துவர்கள் திக்குமுக்காடி போனதைக் குறிக்கலாம் எனச் சிலர் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என Nicolas கணித்திருந்த நிலையில், அது ''Black Lives Matter Movement'' தொடர்புடையதாக இருக்கலாம் எனவும், இந்த போராட்டங்கள் இரண்டு, மூன்று ஆண்டுகள் தொடரலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு நல்ல வாழ்க்கையைத் தேடிப் பல நாட்டு மக்கள் கூட்டம், கூட்டமாக வேறொரு நாட்டை நோக்கிச் செல்வதைப் போலவும் தான் உணர்ந்ததாக Nicolas கூறியுள்ளார்.

மேலும் உலக தலைவர் ஒருவர் கொலை செய்யப்படுதல், உலக மாநாடு ஒன்றில் பாலியல் தொடர்பான ஊழல், எரிமலை வெடிப்பு எனப் பல கெட்ட விஷயங்கள் நடக்கலாம் எனவும் Nicolas கணித்துள்ளார்.

மற்ற செய்திகள்