'என்ன சொல்றீங்க?.. 'அவரு' ஆப்கான்ல சிக்கிட்டாரா'!?.. துடித்துப்போன இளவரசர்!.. ஒரு ஆளுக்காக... தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரிட்டன் படை!... யார் அவர்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இராணுவ வீரர் ஒருவரை மீட்பதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தானே களமிறங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

'என்ன சொல்றீங்க?.. 'அவரு' ஆப்கான்ல சிக்கிட்டாரா'!?.. துடித்துப்போன இளவரசர்!.. ஒரு ஆளுக்காக... தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரிட்டன் படை!... யார் அவர்?

இளவரசர் வில்லியம், Sandhurst என்ற இடத்தில் இராணுவ பயிற்சி பெற்றபோது ஆப்கன் வீரர் ஒருவரை சந்தித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கையில் வீழ்ந்த நிலையில், அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இந்நிலையில், இளவரசர் வில்லியமுக்கு அறிமுகமான அந்த குறிப்பிட்ட வீரரின் குடும்பம் காபூலில் சிக்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அரச குடும்பத்தினருக்கு உதவும் இராணுவ வீரர்களில் ஒருவரான Rob Dixon என்பவர் மூலம் அந்த ஆப்கன் வீரரைத் தொடர்பு கொண்ட வில்லியம், அந்த ஆப்கன் வீரரையும், அவரது குடும்பத்தினரையும் காபூல் விமான நிலையத்திலிருந்து மீட்டு பிரிட்டனுக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அதிகாரியான Major Andrew Fox என்பவர், எங்களுக்கு இராணுவத்தில் கற்றுக்கொடுக்கப்பட்ட உண்மை, மற்றவர்கள் மீது மரியாதை போன்ற கொள்கைகளைக் கடைப்பிடித்து, அதன்படியே இளவரசர் அந்த இராணுவ வீரரை மீட்கும் விவகாரத்தில் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்