“ரொம்ப தேவைதான்.. நாடே கொரோனாவுல இருக்குறப்ப.. இப்படியா செய்வீங்க?”.. ஜனாதிபதியையும், அவரது மனைவியையும் கரித்துக் கொட்டும் மக்கள்.. காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகமெங்கும் கொரோனா பரவிக் கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியும் அவருடைய மனைவியும் செய்த செயல் வைரலாகியுள்ளது.

“ரொம்ப தேவைதான்.. நாடே கொரோனாவுல இருக்குறப்ப.. இப்படியா செய்வீங்க?”.. ஜனாதிபதியையும், அவரது மனைவியையும் கரித்துக் கொட்டும் மக்கள்.. காரணம் இதுதான்!

பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் அவருடைய மனைவி இருவரையும் இவர்கள் செய்த ஒரு செயலுக்காக மக்கள் கரித்துக் கொட்டாத குறையாக பேசி வருகின்றனர். பொதுமக்களிடையே ராஜ மரியாதையை பெற வேண்டிய இவர்கள் இப்படி தூற்றப்படுவது ஏன்?

ALSO READ: ‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்!” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்!

இவர்கள் இவ்வாறு தூற்றப்படுவதற்கு வேறு யாரும் காரணம் அல்ல. இவர்கள் செய்த ஒரு செயல் தான்.  ஆம், ஜனாதிபதி Emmanuel Macron (இமானுவேல் மேக்ரான்), இவருடைய மனைவி Brigitte Macron (பிரிஜிட் மேக்ரான்) இருவரும் பாரீஸில் இருக்கும் தங்களது அதிகாரப்பூர்வ அரண்மனையான Elysee Palace-ஐ அழகுபடுத்த நினைத்துள்ளனர்.

இதற்கென £540,709 பவுண்டுகள் (600,000 யூரோக்கள்) இவர்கள் செலவு செய்து இருக்கின்றனர். நாட்டின் முதல் குடிமக்களாக கருதப்படும் இருவரும் உலகையே கொரோனா அச்சுறுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் இவ்வாறு செய்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான காலகட்டத்தில் இவர்களை சந்திக்க எந்த நாட்டு தலைவர்களும் வரவில்லை.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் பூக்களால் அழகு படுத்துவதற்காக   Elysee Palace-க்கு இவர்கள் செலவு செய்துள்ளது தான் மக்களின் இந்த கோபத்திற்கு காரணம். அது மட்டுமல்லாமல், இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர்கள் கூட இப்படி செய்யவில்லை. அதாவது இப்போது செலவிடப்பட்ட தொகையை விட குறைவாகவே முன்னாள் ஜனாதிபதிகள் செலவிட்டுள்ளனர். ஆனால் Emmanuel,Brigitte இருவரும் Elysee Palace-ஐ பூக்களால் அழகு படுத்துவதற்கு செலவிட்ட தொகை இதற்கு முன்பாக செலவு செய்த தொகைகளை விட ஐந்து மடங்கு அதிகம்.

இவர்களது இந்தச் செயல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருநாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சிக்கலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலிருந்து விடுபடுவதற்காக அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மக்கள் செலுத்திய வரிப்பணம் இப்படி செலவிடப்படுவது மக்களிடையே கொந்தளிப்பை கிளறி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி பேசிய மக்களுள் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘நம்மளை சேமிக்கச் சொல்லி அதிக வரி வசூலித்தார்கள். ஆனால் அவர்கள் ஜாலியாக கொண்டாடுறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செலவு செய்ததை பார்த்தால் கொரோனா எல்லோரையும் பாதிப்பதில்லை என்பது தெரிகிறது என்று ஒருவர் பதிவு செய்துள்ளார்.

ALSO READ: ‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு!’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி!.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’!

மேலும், ஒன்றுமில்லாத ஏழைகளை அவமதிக்கும் செயல் தான் இது என்றும் அவர் கொந்தளித்துள்ளார். பொதுமக்களை அவமானப் படுத்தும் செயல் என்றும் பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் பிரெஞ்சு குடிமகன்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்