'கர்ப்பமா இருக்கும் போதே கர்ப்பமா?'.. ‘டிக்டாக்கில்’ கர்ப்பிணி பெண் வெளியிட்ட தகவல்! ஆச்சரியத்தில் இணைய வாசிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

'கர்ப்பமா இருக்கும் போதே கர்ப்பமா?'.. ‘டிக்டாக்கில்’ கர்ப்பிணி பெண் வெளியிட்ட தகவல்! ஆச்சரியத்தில் இணைய வாசிகள்!

அமெரிக்காவில் Blonde Bunny எனும் பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மகிழ்ச்சியில் அவர் திளைத்து இருந்தார். அந்த கர்ப்பிணிப் பெண் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கர்ப்பம் ஆனதாக ஒரு செய்தி வெளியானது. சற்று அதிரவைக்கும் இந்த செய்தி மருத்துவ உலகில் மட்டுமே நம்ப கூடிய ஒன்றாக இருந்தது.

pregnant while pregnant? Woman expects 3 babies superfetation

இந்நிலையில் 3 குழந்தைகளுக்கு இந்த பெண் ஒரே நேரத்தில் தாயாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த தகவலை சமூக ஊடக தளத்தில் வெளியிட்டு அந்த பெண்மணி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள் இந்த நிலையை Superfetation என்று அழைப்பதாகவும் ஒருமுறை கர்ப்பமானதும் உடம்பில் சில மாறுதல்கள் நிகழும், ஆனால் தனக்கு அந்த மாதிரியான மாதிரி மாறுதல்கள் எதுவும் நிகழவில்லை என்று அந்த பெண் டிக்டாக் மூலம் தெரிவித்திருக்கிறார்.

pregnant while pregnant? Woman expects 3 babies superfetation

ALSO READ: "ரஜினியோட ‘அந்த’ அறிக்கையில ‘இந்த’ பாராவ கவனிச்சீங்களா?".. ஆடிட்டர் குருமூர்த்தியின் வைரல் ட்வீட்!

உலகில் அதிக பெண்களுக்குதான் மாதமிருமுறை கருமுட்டை வெளியாகும் எனவும் 3 சதவீதப் பெண்களுக்கு ஒரே நேரத்தில் இப்படி இரண்டு முறை கருவுறும் நிலை உண்டாகும் என்றும் மருத்துவர்கள் கூறுவதாகவும், அத்துடன் ஒரே நாளில் பிரசவம் நடக்கும் என்றாலும் வெவ்வேறு நாளில் கருவுற்றால் கூட இந்த குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் என்று கருதப்படுவார்கள் என்றும் Blonde Bunny தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்