துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம்.. கலங்கிப்போன மக்கள்.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ வெளியான அடுத்த தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம்.. கலங்கிப்போன மக்கள்.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ வெளியான அடுத்த தகவல்..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | எவ்வளவு விலைன்னு தெரியாம, சல்லிசல்லியா நொறுக்கிட்டாங்களே.. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷம்.. பெண் செஞ்ச வேலை..!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எலும்பை துளைக்கும் குளிர், வாட்டும் பசி என துருக்கி மக்களின் சோகம் நீள்கிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்காக உலக நாடுகள் பலவும் உதவி செய்ய களத்தில் இறங்கியுள்ளன. மிட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியில் ஏற்பட்டிருக்கிறது.

Powerful Earth Quake Hit Turkey Tremor felt in neighboring countries

Images are subject to © copyright to their respective owners.

தெற்கு துருக்கியில் உள்ள நகரமான அண்டாக்கியா-வை மையமாகக்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சிரியாவில் அதிர்வுகள் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சில இடங்களில் வீடுகள் சரிந்ததாகவும், அதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் ஹடாய் பகுதி மேயர் லுட்ஃபு சாவாஸ் தெரிவித்திருக்கிறார். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க, அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் பல பாதிப்புகளை சந்தித்துவரும் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "சுயநலம் இல்லாத மனுஷன்".. புஜாராவுக்காக ரோஹித் செஞ்ச தியாகம்.. பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!!..

EARTH QUAKE, TURKEY

மற்ற செய்திகள்