'சும்மா கிழி!'.. 'இதெப்டி இருக்கு?'.. ரஜினியாகவே மாறி ரகளை செய்த உலக லெவல் கிரிக்கெட் வீரர்.. இன்ஸ்டாகிராமில் பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலம் பெரும் கவன ஈர்ப்பை செய்து வருபவர்.
இவர் குறிப்பாக தமிழ் படங்களில் வரும் பிரபல நடிகர்கள் நடித்த பாடல்களுக்கு ஆடியும் அந்த பாடல்களை பாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வாடிக்கை. இவருடைய இன்ஸ்டாகிராமில் பல தமிழர்கள் ரெகுலர் ரசிகர்கள் இந்த நிலையில் இவர் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை Reface செய்து தனது படத்தை பொருத்தி, தான் நடித்தது போல் அந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருக்கிறார்.
பிரபல நட்சத்திரங்கள் நடித்த காட்சிகளில் Reface செயலின் மூலம் தங்களுடைய முகத்தை Reface செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் காட்சிகளில் தனது முகத்தை மாற்றிப் பொருத்தி, ரஜினி பேசும் வசனங்கள் தான் பேசுவதுபோல பட்டாசாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலரும் விதவிதமாக கமெண்ட்டுகள் செய்து வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்