நீண்ட நேரம் அசைவின்றி டேபிளின் மீது தலைவைத்து படுத்திருந்த பெண்??.. கதவை உடைத்து உள்ளே போன போலீஸ்க்கு காத்திருந்த ட்விஸ்ட்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கலைக் கண்காட்சி அரங்கம் ஒன்றில், இளம்பெண் ஒருவர் நீண்ட நேரமாக அசைவின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அதன் பின்னர் நடந்த விஷயம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீண்ட நேரம் அசைவின்றி டேபிளின் மீது தலைவைத்து படுத்திருந்த பெண்??.. கதவை உடைத்து உள்ளே போன போலீஸ்க்கு காத்திருந்த ட்விஸ்ட்..

  Represent Image  © Copyright to their respect Owners.

லண்டன் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்பகுதியில் கலைக் கண்காட்சி அரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அங்கே உள்ள அரங்கத்தில் இளம் பெண் ஒருவர் சூப் பாத்திரத்திற்குள் முகம் மூழ்கிய நிலையில், தலை கவிழ்ந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த கணமே அந்த அரங்கத்திற்கு போலீசார் நுழைந்து அந்த பெண் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

அந்த சமயத்தில் தான், பெண்ணுக்கு என்ன ஆனது என அறிய வந்த போலீசாருக்கு கடும் தர்ம சங்கடமும் உருவாகி உள்ளது. இதற்கு காரணம், தலை கவிழ்ந்து மேஜை மீது கிடந்தது ஒரு பெண்ணே அல்ல என்பது தான். அது உண்மையான பெண் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மை என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

Police think art work as real woman try to save it

முன்னதாக, அந்த அரங்கிற்குள் சென்ற போலீசார், கதவை உடைத்து அந்த பெண்ணை காப்பாற்ற உள்ளே சென்றதாகவும் சொல்லப்படுகிறது. காஃபி அருந்தி வருவதற்காக அதே கட்டிடத்தின் மேல் பகுதியில் சென்றிருந்த அருங்காட்சியக ஊழியர் திரும்பி வரும் போது கதவு உடைக்கப்பட்டு போலீசார் அங்கே நிற்பதைக் கண்டு திகைத்து போயுள்ளார்.

Police think art work as real woman try to save it

கிறிஸ்டினா என அழைக்கப்படும் இந்த பொம்மை, அமெரிக்க கலைஞரான மார்க் ஜென்கின்ஸ் என்ற நபரால் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, Laz Emporium என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கூட, சில மாதங்களுக்கு முன்பு இதே போல, கிறிஸ்டினா என்ற பொம்மை இருந்த அரங்கத்தில் அதனை நிஜமான பெண் என நம்பி, மருத்துவ உதவிக் குழுவினர் வரை அழைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ART, WOMAN

மற்ற செய்திகள்