அதிகாரிகளின் மெத்தனத்தால் .. '27 வருடங்களாக'.. தவித்து வந்த குடும்பம்... நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயின் நாட்டில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் இறந்த தகவலை அதிகாரிகள் தரப்பு 27 ஆண்டுகளாக அந்த குடும்பத்திற்கு தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ள விவகாரத்தில் தற்போது புதிய திருப்புமுனை நடந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மரணம் அடைந்த இளைஞரின் தாயாரும் சகோதரர்களும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிரானடா நகருக்கு அருகே Baza பகுதியில்1,990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலையில் 24 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் ஆறு நாட்களை அடுத்து அவரது குடும்பத்தினர் அதன் அந்த இளைஞரை காணவில்லை என்று போலீசாருக்கு புகார் அளித்தனர்.
அதிகாரிகளின் பிழையால் இளைஞர் சாலை விபத்தில் கொல்லப்பட்ட தகவல் குடும்பத்தினருக்கு போய் சேரவில்லை. குடும்பத்தினரை பொருத்தவரை இளைஞர் காணாமல் போய்விட்டார் என்று நம்பி இருந்துள்ளனர். ஆனால் இந்த தகவல் 2017 ஜூன் மாதம் 12ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதனால் இந்த விவகாரத்தில் ஆத்திரமும் வேதனையும் கொண்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். இதைப்பற்றி விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட தாயாருக்கு 58 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடாக அளிக்க உத்தரவிட்டதுடன் கொல்லப்பட்ட இளைஞரின் 4 சகோதரர்களுக்கும் தலா 18 ஆயிரம் பவுண்டுகள் வழங்கவும் தீர்ப்பளித்துள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் இந்த விவகாரம் தாமதம் ஆகியதாகவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்