2 நாட்டையும் இணைக்கும் பிரம்மாண்ட Tunnel.. போதை ஆசாமிகளை பிடிக்கப்போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..உள்ளே இருந்த பலே டெக்னாலஜி..!
முகப்பு > செய்திகள் > உலகம்போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பிரம்மாண்ட பாதாள சுரங்கத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சுரங்க பாதை
வட அமெரிக்காவில் உள்ளது மெக்சிகோ நாடு. போதை மருந்து தயாரிப்பு குழுக்கள் அதிகமாக இஇருப்பதாக சொல்லப்படும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மெக்சிகோ - அமெரிக்க எல்லையை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அமெரிக்க எல்லையில் இருந்த ஒரு சேமிப்பு கிடங்குக்கு அதிகளவில் கார்கள் வந்துசெல்வதை போலீசார் கவனித்திருக்கின்றனர்.
இதனை அடுத்து அந்த சேமிப்பு கிடங்கை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். பின்னர் உள்ளே நுழைந்த போதுதான் கிடங்கிற்குள் பிரம்மாண்ட பாதாள சுரங்க பாதை இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வசதிகள்
61 அடி ஆழமும் 4 அடி விட்டமும் கொண்டிருந்த இந்த சுரங்கப் பாதையில் காற்று உள்ளே வருவதற்கு சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கான்கிரீட் சுவரால் இந்த பாதை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார வசதியும் உள்ளே இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கிடங்கில் இருந்த 6 பேரை கைது செய்து, வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அந்த கும்பலிடம் இருந்து 1,762 பவுண்டுகள் கோகோயின், 164 பவுண்டுகள் மெத் மற்றும் 3.5 பவுண்டுகள் ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.
நடவடிக்கை
கலிபோர்னியாவின் தெற்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் ராண்டி கிராஸ்மேன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த போதைப்பொருள் சுரங்கப்பாதையின் முடிவில் இன்னும் விளக்குகள் பொருத்தப்படவில்லை. எங்கள் பகுதிக்கு சட்டவிரோத போதைப்பொருள் வருவதைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. எங்களது மக்களை அழிக்கும் நோக்கில் போதைப்பொருட்களை கடத்திவரும் இதுபோன்ற ஒவ்வொரு ரகசிய கடத்தல் வழியையும் நாங்கள் அகற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுரங்கப்பாதை எவ்வளவு நாட்களாக பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்தும் இதில் தொடர்புடைய கடத்தல்காரர்களை பிடிக்கும் நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பிரம்மாண்ட போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்பட்டுவந்த சுரங்கப் பாதையை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்