"இப்போ இதுதான் ட்ரெண்ட்".. சப்பாத்தி செஞ்ச பில் கேட்ஸ்.. பாராட்டி பிரதமர் மோடி கொடுத்த ஹெல்த் அட்வைஸ்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் பகிர்ந்துள்ள வீடியோ உலக அளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பில் கேட்ஸை பாராட்டியதுடன் ஆரோக்கியம் குறித்த அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.

"இப்போ இதுதான் ட்ரெண்ட்".. சப்பாத்தி செஞ்ச பில் கேட்ஸ்.. பாராட்டி பிரதமர் மோடி கொடுத்த ஹெல்த் அட்வைஸ்.. வீடியோ..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரயில் தண்டவாளத்தையே கொள்ளையடித்த கும்பலா.? அதுவும் 2 கிமீ நீளத்துக்கு.. யாரு சாமி இவங்க..!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவராவார். இளம் வயதிலேயே புரோகிராமிங் செய்வதில் வல்லவராக திகழ்ந்த பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்கினார்.

Images are subject to © copyright to their respective owners.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வெற்றிநடை போடத்துவங்கிய காரணத்தினால் பெரும் செல்வந்தர் ஆனார் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 12 முறை முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மனிதாபிமான சேவைகளையும் உலகம் முழுவதிழும் தனது அறக்கட்டளை மூலமாக பில் கேட்ஸ் செய்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பில் கேட்ஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் எய்டன் பெர்னாத் (Eitan Bernath) உடன் இணைந்து சப்பாத்தி செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது. அதில் Eitan Bernath இந்தியாவின் பீகார் மாநிலத்திற்கு தான் சென்றபோது கையால் ரொட்டி சுடுவது பற்றி அங்கிருந்த பெண்களிடம் கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த முறைப்படி சமைக்கவும் Eitan Bernath மற்றும் பில் கேட்ஸ் ஆகிய இருவரும் முயற்சிக்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிய நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அத்துடன் பில் கேட்ஸ்-க்கு ஆரோக்கியம் குறித்த அறிவுரையையும் அவர் வழங்கியிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து மோடி எழுதிய பதிவில்,"சூப்பர். இந்தியாவின் சமீபத்திய சிறுதானியங்கள் தான். இவை ஆரோக்கியமானது ஆகும். பல சிறுதானிய உணவுகள் உள்ளன. அதையும் நீங்கள் செய்ய முயற்சி செய்யலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Also Read | செங்குத்தான மலை பாதை.. அசால்ட் செய்த வந்தே பாரத் ரயில்.. அமைச்சர் பகிர்ந்த வீடியோ..!

PM MODI, BILL GATES, MAKING ROTI, HEALTH ADVICE

மற்ற செய்திகள்