"உங்களால எதுவும் செய்ய முடியலனாலும் பரவால்ல! தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப்!" - கெத்து காட்டிய அமெரிக்க போலீஸ் அதிகாரி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கறுப்பினத்தைச் சேர்ந்தவராகக் கூறப்படும் ஜார்ஜ் ஃபிளாய்ட் அமெரிக்க காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் 40 நகரங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

"உங்களால எதுவும் செய்ய முடியலனாலும் பரவால்ல! தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப்!" - கெத்து காட்டிய அமெரிக்க போலீஸ் அதிகாரி!

மேலும் போராட்டக்காரர்களை கலைக்க முற்படும்போது போராட்டம் தீவிரமாகிக் கொண்டு வரும் நிலையில்,  “நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்கிறீர்கள்? நாட்டில் அமைதி திரும்பவில்லை என்றால் ராணுவத்தை இறக்கி விடுவேன்” என்று  மிரட்டும் தொனியில் மாநில ஆளுநர்களிடம் டிரம்ப் கடுமையாக பேசியுள்ளார்.

இது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம், “வன்முறை எல்லை மீறினால் சுட்டுத்தள்ளவும் செய்யுங்கள்” என்றும் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய, ஹூஸ்டன் நகர காவல் துறை தலைமை அதிகாரி ஆர்ட் அசிவீடோ, “ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறும் காலம் இதுவல்ல. மக்கள் தங்கள் உடைமைகளை இழந்ததோடு காயம் பட்டுள்ளனர். அதனால் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு இருங்கள் டிரம்ப். இது ஒன்றுதான் உங்களிடம் நான் கேட்கிறேன்” என்று பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,  “பொதுமக்களிடம் நான் ஒன்றே ஒன்று மட்டுமே கேட்கிறேன். காவலர்களுடன் இணையுங்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சேர்ந்து செய்வோம். அமைதியான முறையில் உங்கள் பேரணிகளை நடத்துங்கள். வெறுப்பை அடக்க அன்பு மட்டுமே ஒரே வழி” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு நாட்டின் அதிபராக

இருந்தாலும், அவரைப் பார்த்து துணிச்சலாக வாயை மூடுங்கள் என்று இந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்