'எதுக்கு கரண்ட், கேஸ்லாம் வேஸ்ட் பண்ணனும்...' 'அது யாருமே யூஸ் பண்ணாம சும்மா தானே கெடக்கு...' - பீட்சா ரெடி பண்ண கிச்சன 'எங்க' போய் வச்சிருக்காரு பாருங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்பீட்சாவில் பன்னீர் பீட்சா, மெக்ஸிகன் பீட்சா, வெஜ், நான்-பீட்சா என பல வகைகள் உள்ளன. இது எல்லாவற்றையும் விட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பீட்சா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக பீட்சா என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உலகம் முழுவதும் இருக்கிறது. அதுவும் அதில் ஏதாவது வித்தியாசமாக செய்தால் ஊரே உற்றுப் பார்க்கும்.
அதுபோல தான் மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில் இருக்கும் Pacaya எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா செய்து தரப்படுகிறது.
34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா என்னும் இளைஞர் Pacaya எரிமலையின் உச்சி பகுதியிலிருந்து அடிவாரத்திற்கு வழிந்து வரும் எரிமலை தீப்பிழம்புகளை சமையலறையாக மாற்றி பீட்சா தயாரித்து அசத்துகிறார்.
கிட்டத்தட்ட 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக்கூடிய பாத்திரத்தை இதற்கென உருவாக்கி அதன் மூலம் பீட்சா தயாரித்து வருகிறார் டேவிட் கார்சியா.
இவ்வாறு தயாரிக்கும் பீட்சாவிற்கு Pacaya பீட்சா எனவும் அவர் பெயரும் வைத்துள்ளார். இந்த புதுவகையான பிட்சாவை ருசிக்க மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர்.
இதுகுறித்து கூறும் டேவிட், 'பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு எரிமலையிலிருந்து வழிந்தோடும் தீப்பிழம்புகளில் பீட்சா தயாரித்து வருகிறேன். இதன் மணமும், ருசியும் அருமை என எங்களது பீட்சாவை ருசித்தவர்கள் சொல்லி வருகின்றனர்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்