‘ஒரே ஒரு கப் காபியால்’.. பாதியிலேயே 326 பயணிகளுடன்.. ‘அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரு கப் காபியால் 326 பேர் பயணித்த விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

‘ஒரே ஒரு கப் காபியால்’.. பாதியிலேயே 326 பயணிகளுடன்.. ‘அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்’..

ஜெர்மனியின் பிராங்க்பர்டில் இருந்து மெக்சிகோவின் கேன்கன் நகருக்கு ஏர்பஸ் ஏ330 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. விமானம் அட்லாண்டிக் கடலின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானி அறையில் வைக்கப்பட்டிருந்த சூடான காபி சிந்தியுள்ளது. அதை முதலில் சாதாரணமாக நினைத்த விமானி பின்னர் பார்த்தபோது  விமானத்தை கட்டுப்படுத்தும் பேனல் பகுதியில் காபி சிந்தியதில் அதன் ஆடியோ செயலிழந்ததுடன், மின்சாதனப் பொருட்கள் கருகும் வாசனையும் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பைலட் உடனடியாக விமானத்தை அயர்லாந்துக்கு திருப்பி தரையிறக்கியுள்ளார். பின்னர் அதில் பயணம் செய்த 326 பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் காபி  வைப்பதற்கென தனி இடம் உள்ள நிலையில் விமானியின் அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவத்திற்காக அவருக்கு அந்நாட்டு சட்டப்படி 10 ஆயிரம் முதல் 80 ஆயிரம் யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

PLANE, COFFEE, EMERGENCY, PILOT, LANDING