Nadhi mobile
Maha Others

Take Off ஆன 15 நிமிஷத்துல விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. இறுதி நேரத்திலும் அவர் எடுத்த முடிவு.. கவலையில் மூழ்கிய விமான நிலையம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேஷியாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றை இயக்கிய விமானி, திடீரென உயிரிழந்த சம்பவம் விமான நிலைய அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Take Off ஆன 15 நிமிஷத்துல விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. இறுதி நேரத்திலும் அவர் எடுத்த முடிவு.. கவலையில் மூழ்கிய விமான நிலையம்..!

Also Read | CBSE தேர்வு முடிவுகள்: எல்லா பாடத்துலயும் செண்டம்.. இந்தியாவை திரும்பி பார்க்க வச்ச 2 மாணவிகள்..!

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் இருக்கிறது சுரபயா சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து கடந்த வியாழக்கிழமை காலை தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள உஜுங் பாண்டாங் நகரத்திற்கு விமானம் ஒன்று கிளம்பியிருக்கிறது. டேக் ஆஃப் செய்த 15 வது நிமிடத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் கிடைத்திருக்கிறது. இதனை கேட்ட அதிகாரிகள் அதிச்சியடைந்துள்ளனர்.

உடல்நலக் குறைவு

விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த விமானத்தில் இருந்த பணியாளர்கள், விமானியின் உயிரை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இருப்பினும், உடனடியாக விமானத்தை தரையிறக்குவது தான் சரியான முடிவாக இருக்கும் என விமானி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் விமான நிலையமே பரபரப்படைந்தது.

கொஞ்ச நேரத்தில், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு மேலே பறப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் தயார் செய்யப்பட்டு இருந்திருக்கிறது. அதிகாரிகள் வழிகாட்ட சரியாக விமானத்தை தரையிறக்கியுள்ளார் விமானி. அப்போது அவர் மயக்கமடைந்துவிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக சின்ஹுவா பகுதியில் இருந்த மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

Pilot of passenger plane dies after making emergency landing

சோகம்

இதனிடையே, இதுகுறித்து பேசிய விமான நிறுவன இயக்குனரான தேவா கடேக் ராய் வெளியிட்ட அறிக்கையின்படி, பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் விமானம் செல்வதற்கு முன்பு சுகாதார சோதனைகளை நடத்தியதாகவும், அவர்கள் விமான பயணத்திற்கு  தகுதியானவர்கள் உறுதியான பின்னரே பயணம் துவங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் விமானி உயிரிழந்ததற்கான உடனடி காரணம் என்ன என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், விமானியின் உடல் அவரது சொந்த ஊரான ஜகார்த்தாவுக்கு அனுப்பப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Also Read | திடீர்னு பிங்க் கலர்ல மாறிய வானம்.. ஏலியன்களோட வேலைன்னு தெறிச்சு ஓடிய பொதுமக்கள்..லாஸ்ட்ல உண்மையை ஒத்துக்கொண்ட கம்பெனி..!

PILOT, PASSENGER, PLANE, EMERGENCY LANDING

மற்ற செய்திகள்