"என்ன Road'அ பாத்து போயிட்டு இருக்கு?.." நடுவானில் நடந்த பரபரப்பு.. பதைபதைப்பை ஏற்படுத்திய 'த்ரில்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு சுற்றித் திரிய, விமானங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படிப்பட்ட விமானங்கள், நடுவானில் பல ஆயிரக்கணக்கான அடிக்கு மேல் பறந்து செல்லும் போது, சில எதிர்பாராத விபத்துகள் மற்றும் அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெறாமலும் இல்லை.
திடீரென ஏதாவது தொழில்நுட்ப கோளாறினால், பழுது ஏற்பட்டு விபத்து நிகழ்வது தொடர்பான நிறைய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதன் காரணமாக, உயிருக்கு ஆபத்தான சம்பவங்கள் கூட நிறைய நிகழ்ந்துள்ளது.
விமானத்தில் உருவான கோளாறு
ஆனால், அதே வேளையில் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில், திடீரென கோளாறு ஏற்பட்டாலும், அதனை மிகவும் சாதுர்யமாக கையாண்டு, எந்தவித சேதமும் இல்லாமல், சரியான நேரத்தில் விமானத்தை தரை இறக்கி விபத்தினை தவிர்க்கும் விமானிகள் குறித்தும் நாம் அதிகம் கேட்காமல் இல்லை.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த அசாத்திய செயலும், அதன் பின்னால் இருந்த பரபரப்பு நிகழ்வையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
அமெரிக்காவின் வட கரோலினா என்னும் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ஃப்ரேசர் என்பவர், தனது மாமனாருடன் ஸ்வைன் கவுண்டி என்னும் பகுதியில், தனி விமானம் ஒன்றில் பறந்து கொண்டிருந்துள்ளார். அப்போது விமானத்தின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக, அதனை சரி செய்ய வின்சென்ட் முயன்றும் முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சாலையில் இறங்கிய விமானம்
ஆனாலும், இன்ஜினில் மீண்டும் கோளாறு உருவானதால், விமானம் வேகமாக தரையை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. வேகமாக சென்று கொண்டிருந்ததால், விமானத்தை உடனடியாக எங்காவது தரை இறக்கவும் வின்சென்ட் முடிவு செய்துள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றை பார்த்த வின்சென்ட், அதன் மீது மெல்ல விமானத்தை இறக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதற்காக மிகவும் போராடிய வின்சென்ட், அந்த சாலையில் மிகவும் கவனமாக எந்த வாகனங்களுக்கும் சேதம் ஏற்படாத வகையில், விமானத்தை சாலையில் இறக்கினார். இது தொடர்பான வீடியோ, விமானத்தில் இருந்த கேமராவில் பதிவாக, இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மிகவும் சிக்கலான ஒரு சூழ்நிலையில், விபத்து மற்றும் உயிர் சேதம் என ஏதும் ஏற்படாத வகையில் தரை இறக்கிய வின்சென்ட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்