டேக் ஆப் செய்யும்போது விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்.. குறுக்க வந்த ட்ரக்.. பதறவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் டிரக்கின் மீது பீச்கிராஃப்ட் வகை விமானம் மோதியதால் விமானி உயிரிழந்திருக்கிறார். வெடித்துச் சிதறிய விமானத்தின் பாகங்களை மீட்புப் படையினர் சேகரித்து வருவதாகவும் டிரக் டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பித்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
கிளம்பிய கரும்புகை
புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் டேவிசன் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் I-85 தெற்கு சாலையின் மேலே பறக்கும்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் பெடரல் விமான போக்குவரத்து ஆணையத்தினைச் சேர்ந்த அதிகாரிகள்.
விமானி மரணம்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மிகவும் தாழ்வாக பறந்த விமானம் I-85 தெற்கு சாலையில் சென்று கொண்டிருந்த ஃபோர்டு டிரக்கில் மோதி இருக்கிறது. இதனால் மொத்த விமானமும் தீ பிடித்து எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விமானத்தில் சிக்கிய விமானி 43 வயதான ரேமண்ட் அக்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், விமானம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட டிரக்கில் இருந்த அதன் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அவரை மீட்ட அதிகாரிகள் அவரை வின்ஸ்டன் சலீம் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாழ்வாக பிறந்த விமானம்
இந்த துயர சம்பவத்தை நேரில் பார்த்த டொனால்ட் ஹோல்ட் சீனியர் மற்றும் அவரது மனைவி இது குறித்து படபடப்புடன் கூறுகின்றனர். டொனால்டின் மனைவி இதுபற்றி பேசுகையில்," விமானம் மிகவும் தாழ்வாக பறந்தது. இதுகுறித்து நான் கணவரிடம் தெரிவித்தேன். சற்று நேரத்தில் அப்பகுதி முழுவதும் கரும்புகை கிளம்பியது. தீ எரிவதையும் பார்த்தோம்" என்றார்.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் அந்தப் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. விமானம் சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக்கில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் விமானி உயிரிழந்திருப்பது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.
மற்ற செய்திகள்