நம்ம ஊர்ல கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி.. அவுங்க ஊர்ல தலையணை போட்டி.. ரவுண்ட் கட்டிய வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வீட்டில் சின்ன வயதில் சகோதரர்கள், சகோதரிகள் சண்டை போட்டுகொண்டால் ஏய் பிள்ளைங்களா அடிச்சுக்காம விளையாடுங்க. ரத்தம், காயம் படாத அளவிற்கு தலையணை சண்டை, கட்டிபிடித்து மோதிக்கொள்ளுவோம். இதுவரை செல்ல விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த தலையணை சண்டை, தற்போது குத்துச்சண்டைக்கு இணையான முழுமையான விளையாட்டாக மாறியுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக தலையணை சண்டையில் அதிகாரப்பூர்வ சாம்பியன்கள் உருவாகியுள்ளனர்.  இதனை Pillow Fight Championship (PFC) என்று அழைக்கின்றனர்.

நம்ம ஊர்ல கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி.. அவுங்க ஊர்ல தலையணை போட்டி.. ரவுண்ட் கட்டிய வீரர்கள்!

ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்த முகமது ஜின்னா டவர் விவகாரம்!.. குண்டூரில் கொந்தளித்த பாஜக.. அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்த தலையணை  சண்டையில், பாக்சிங் மட்டுமன்றி பல்வேறு தற்காப்புக் கலைகளை பயன்படுத்தி, வீரர்கள் தலையணை சண்டையிட்டனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற மாகாணமான புளோரிடாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இதன்  இறுதிப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டு , வெற்றி பெற்ற  வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது . இந்த போட்டியில் 16 ஆண்களும் எட்டு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். ஆண்கள் - பெண்கள் என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டது.

Pillow Fighting Becomes Official Combat Sports in america

குத்துச்சண்டை , மல்யுத்தம் போன்ற விளையாட்டை கண்டு ரசித்த மக்களுக்கு சின்ன பிள்ளைகள் விளையாடும் தலையணை போட்டி பார்க்க சுவாரஸ்யமாகவும், மக்களின் கரைகோசங்களும் அரங்கை அதிர வைத்தன. இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவ் வில்லியம்ஸ் கூறுகையில், "தலையணையை வைத்து விளையாடுவது நம் அனைவருக்கு பிடித்த ஒன்று.  இதனை ஒரு குத்துச்சண்டைக்கான வளையத்திற்குள் நிகழ்த்தினால் எப்படி இருக்கும் என யோசித்துதான் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுருக்கிறார்.  பொதுவாக சண்டை என்றாலே கோபம் , ரத்தம், காயம் என அரங்கமே அதிர்ச்சியில் அமர்ந்திருக்கும் . பெரும்பாலோனர் இதனை விரும்புவதில்லை . அவர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் நோக்கில்தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

தலையணை சண்டையில் போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் வயிறு குலுங்க சிரித்து போட்டியை ரசித்தனர். தலையணையை வைத்து போட்டியிடுகிறோம் இதில் என்ன சிரமம் இருக்கிறது என்று யூகிக்க வேண்டாம். போட்டியாளரின் கைகளில் இருந்து தலையணை பறிபோனால், எதிர்போட்டியாளர் துவம்சம் செய்துவிடுவார். இதற்காகவே அதிக எடை கொண்ட தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது.

Pillow Fighting Becomes Official Combat Sports in america

இந்த போட்டியில்  பிரேசிலைச் சேர்ந்த இஸ்டெலா நூனிஸ் பெண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலே டில்மேன் ஆண்களுக்கான பட்டத்தைத் தட்டிச் சென்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கான பெல்ட் , கோப்பை மற்று 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

'தப்பு தான்.. என்ன மன்னிச்சிடுங்க..' நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்.. ஏன் தெரியுமா?

PILLOW FIGHTING, OFFICIAL COMBAT SPORTS IN AMERICA, FIRST-EVER PILLOW CHAMPIONSHIP, UNITED STATES, தலையணை போட்டி, சாம்பியன்கள்

மற்ற செய்திகள்