VIDEO: ராசா, நீ கடல்ல வாழுற ஆளாச்சே..! எப்படி நடுரோட்டுக்கு வந்த..? படு டேஞ்சரான விலங்கு.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கலிபோர்னியா: கலிபோர்னியாவின் நெடுஞ்சாலையில் கடல் சிங்கம் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் படியான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரளாகி வருகிறது.

VIDEO: ராசா, நீ கடல்ல வாழுற ஆளாச்சே..! எப்படி நடுரோட்டுக்கு வந்த..? படு டேஞ்சரான விலங்கு.. வைரல் வீடியோ

இயற்கை சமநிலை இழத்தல்:

விலங்கினங்கள், பறவைகள் உள்ளிட்ட மனிதர்கள் அல்லாத பிற உயிரிகள் இந்த உலகில் வாழ்வதற்கான தடைகளை மனித சமூகம் ஏற்படுத்தி வருகிறது. மனிதன் தன் சுயலாபத்திற்காக செய்யக் கூடிய காரியங்கள் இயற்கையின் சமநிலையை குலைக்கும் வண்ணம் உள்ளது. காடுகளை அழித்தல், காற்றில் ரசாயன கள்ளத்தால், தொழிசாலை கழிவுகளின் மூலம் நீர் மாசுபடுதல் போன்றவை தொடர்கதையாகி வருகிறது.

Photo of a sea lion resting on a highway in California

இதனால் லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் கொத்து கொத்தாக சாவும் அவலமும் நிகழ்கிறது. காட்டில் வசிக்கும் மிருகங்களும் அவ்வப்போது மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருகிறது. இப்படியாக வருவதும் மனிதர்களுக்கு தான் ஆபத்து என்பதை மனித சமூகம் உணரவில்லை.

Photo of a sea lion resting on a highway in California

சாலையின் நடுவே வந்த மிருகம்:

இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் கடலில் காணப்படும் கடல் சிங்கம் ஒன்று சாலையின் நடுவே படுத்திருந்துள்ளது. தோற்றத்தில் அழகான இருக்கும் கடல் சிங்கங்கள் ஆபத்தானவை. இந்த கடல் சிங்கத்தை பார்த்த வாகன ஓட்டிகளில் சிலர் நெடுஞ்சாலையில் வாகனம் வேகமாக வரும் நிலையில் கடல் சிங்கம் காயமடையக்கூடாது என இரண்டு பேர் அதன் அருகில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்துள்ளனர்.

எப்படி சாலைக்கு வந்தது?

இவர்களின் இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கடல் சிங்கம் நெடுஞ்சாலையில் இருந்த சம்பவம் குறித்து அறிந்த சீ வேர்ல்டின் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். கடல் சிங்கம் சாலையை விட்டு விலகி சென்ற நிலையில், சீ வேர்ல்டின் குழு பாதுகாப்பான இடத்தில் அதனை பிடித்து கொண்டு சென்றனர்.  கடல் சிங்கம் கடலுக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பெரும்பாலும் கடல் சிங்கங்கள் கடலின் நடுப்பகுதியில் தான் காணப்படும். ஆனால் கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள நெடுஞ்சாலைக்கு கடல் விலங்கு எப்படி வந்தது என்று நிபுணர்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்.

 

SEA LION, PHOTO, HIGHWAY, CALIFORNIA, கலிபோர்னியா, கடல் சிங்கம், சாலை

மற்ற செய்திகள்