போராட்டக்களமான 'அமெரிக்கா'... மில்லியன் 'லைக்ஸ்'களை அள்ளிக்குவித்த 'மூவரின்' புகைப்படம்... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவரால் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டு இறந்ததையடுத்து அமெரிக்கா முழுவதும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தது. நிறவெறிக்கு எதிராக பல பதாகைகளை எடுத்துக் கொண்டு மக்கள் தெருக்களில் வந்து போராட்டத்தை நடத்தினர்.

போராட்டக்களமான 'அமெரிக்கா'... மில்லியன் 'லைக்ஸ்'களை அள்ளிக்குவித்த 'மூவரின்' புகைப்படம்... காரணம் என்ன?

மேலும் பல நாடுகளில் உள்ள மக்களும் இந்த படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜார்ஜின் மரணத்தை எதிர்த்து பல போராடி வரும் நிலையில், போராட்டக் களத்தில் இருக்கும் பால்ய கால நண்பர்கள் மூன்று பேரின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி மக்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், அதில் இரண்டு பேர் கறுப்பின இளைஞர்களான கெய்டன் அமோவோ, மோயோ பதுன் ஆகியோரும் மற்றொருவர் வெள்ளையினத்தை சேர்ந்த சீன் ஹில் ஆகும்.

இந்த புகைப்படம் வைரலாக காரணம், 'போராட்டக்களத்தில் இருக்கும் இந்த மூவரில் சீன் ஹில் ஏந்தி நிற்கும் பதாகைகள் தான். அதில், 'I’m not black but I see U. I’m not black but I hear. I’m not black but I will Fight 4 u' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. 'நான் கறுப்பினத்தை சேர்ந்தவரில்லை என்றாலும் உங்களுக்கு எதிராக வன்முறையை பார்த்ததும் உங்களுடன் சேர்ந்து போராட தோன்றுகிறது' என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கெய்டன் அமோவோ கூறுகையில், 'சீனின் பெற்றோர்கள் எங்களை அவரின் பிள்ளைகள் போல சிறு வயது முதல் கவனித்து வந்தார்கள். பள்ளிப்பருவத்திலே நான் நிறவெறியை எதிர்கொண்டு இருக்கிறேன். அப்போது சீன் ஹில் எனக்கு ஆதரவாக நின்றிருக்கிறான்' என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்