"15 வருசமா ராத்திரி, பகல் பார்க்காம உழைச்சத்துக்கு கெடச்ச பரிசு".. துபாய் மாப்பிள்ளைக்கு கெடச்ச லைஃப்டைம் செட்டில்மென்ட்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிலருக்கு எந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றெல்லாம் சொல்ல தெரியாது. திடீரென வாழ்க்கையில் துன்பங்கள் அல்லது கஷ்டங்கள் நிறைந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் அவர் நினைத்து கூட பார்க்காத ஏதாவது ஒரு சம்பவம் அரங்கேறி வாழ்க்கையையே அப்படி புரட்டி போடும். அந்த வகையில் ஒரு சம்பவம் தான், துபாயில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு அரங்கேறி உள்ளது.

"15 வருசமா ராத்திரி, பகல் பார்க்காம உழைச்சத்துக்கு கெடச்ச பரிசு".. துபாய் மாப்பிள்ளைக்கு கெடச்ச லைஃப்டைம் செட்டில்மென்ட்!!

Image Credit : Filipino Times

கேரளா, துபாய், கனடா, அமெரிக்காவின் சில மாகாணங்கள் உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்ட பூர்வமாக விற்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், துபாயில் வசித்து வரும் ரஸ்ஸல் ரெய்ஸ் துஸான் என்பவருக்கு ஒரு அதிர்ஷ்டம் கைக்கூடி உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வரும் ரஸ்ஸல், 19 வயதிலேயே குடும்பத்தினரை விட்டு அங்கே வந்துள்ளார். ஓட்டல் ஒன்றில் ஊழியராகவும் ரஸ்ஸல் பணிக்கு சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. படிப்படியாக உயர்ந்த ரஸ்ஸல், அந்த ஓட்டலின் மேலாளர் பதவிக்கும் வந்துள்ளதாக தெரிகிறது.

அங்கே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து துபாயில் தனது வாழ்நாளை கழித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் குழந்தையை பிலிப்பைன்ஸிற்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுப்பி வைத்துள்ளார். துபாயில் தொடர்ந்து வசித்து வந்த ரஸ்ஸல், கொரோனா தொற்று பரவிய சமயத்திலும் சற்று சிரமப்பட்டு வந்துள்ளார். அவற்றை எல்லாம் கடந்து வந்த ரஸ்ஸல், சமீபத்தில் முதல் முறையாக லாட்டரி டிக்கெட் ஒன்றை நிறுவனத்தில் இருந்து வாங்கி உள்ளார்.

Philippines man woman won crores in dubai change his life

Image Credit : Filipino Times

அப்படி முதல் முறையாக ரஸ்ஸல் வாங்கிய லாட்டரிக்கு குலுக்கல் முறையில் சுமார் 15 மில்லியன் திர்ஹாம்ஸ் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 33 கோடி ரூபாய் ஆகும். இதனை அறிந்து திக்குமுக்காடி போன ரஸ்ஸல், பிலிப்பைன்ஸில் உள்ள தனது மனைவிக்கும் விவரத்தை சொல்லி உள்ளார்.

Philippines man woman won crores in dubai change his life

Image Credit : Filipino Times

முதலில் அவர் இதனை நம்பாத சூழலில், பின்னர் பரிசு கிடைத்த மெயிலை அனுப்பி மனைவியை நம்ப வைத்துள்ளார் ரஸ்ஸல். இத்தனை நாள் தான் பட்ட கஷ்டத்திற்கு தற்போது விடிவு காலம் கிடைத்துள்ளதாக ரஸ்ஸல் கருதும் நிலையில் துபாயிலேயே தனது குடும்பத்துடன் செட்டிலாகவும் அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஓட்டல் ஒன்றை அங்கே திறக்கலாம் என ஆலோசித்து வரும் ரஸ்ஸலின் அதிர்ஷ்டத்தை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

LOTTERY, PHILIPPINES

மற்ற செய்திகள்