எங்களோட மெயின் நோக்கமே 'அது' தான்...! 'இப்போ 12 வயசு குழந்தைகளை வச்சு டெஸ்ட் பண்றோம்...' - குட் நியுஸை வெளியிட்ட பிஃபிஸிர்ஸ் கொரோனா தடுப்பூசி நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மருந்து உற்பத்தி செய்யும் பிஃபிஸிர்ஸ் (Pfizer's)நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கடைசி கட்ட ஆய்வுக்கான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

எங்களோட மெயின் நோக்கமே 'அது' தான்...! 'இப்போ 12 வயசு குழந்தைகளை வச்சு டெஸ்ட் பண்றோம்...' - குட் நியுஸை வெளியிட்ட பிஃபிஸிர்ஸ் கொரோனா தடுப்பூசி நிறுவனம்...!

உலகெங்கிலும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல நாட்டு மருத்துவ நிறுவனங்கள் முயற்சிகள்  எடுத்து வரும் நேரத்தில், நியூயார்க்கை தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான பிஃபிஸிர்ஸ் (Pfizer's)நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்புமருந்தின் கடைசி கட்ட பரிசோதனை நிலையில் உள்ளது.

இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்தின் கடைசிகட்ட ஆய்வுக்கான நெறிமுறையை மீண்டும் மாற்றியமைத்து உள்ளதாகவும், இதில் அதிகளவில் இளம் வயதினருக்கு பரிசோதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பரிசோதனைகளில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 12 முதல் 15 வயது வரையிலான இளம் பருவத்தினரை சேர்க்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக நிறுவனம் திங்களன்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் செய்யப்பட்ட பரிசோதனைகளில் முதலில் 30,000 பங்கேற்பாளர்களுக்காக திட்டமிட்டு பின் செப்டம்பரில் அதை 44,000 பேருக்கு விரிவுபடுத்தியது.

பல்வேறு வயதினரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்காக ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி என  பொதுவான நாள்பட்ட நோய்த்தொற்றுகளைக் கொண்ட நிலையான நோயாளிகளையும் சேர்க்க முடிவு செய்துள்ளது.

கூடுதலாக கணிசமான எண்ணிக்கையிலான ஹிஸ்பானிக், கருப்பு, ஆசிய மற்றும் பூர்வீக அமெரிக்க பங்கேற்பாளர்களும், 56 முதல் 85 வயதிற்குட்பட்டவர்களுக்கும் சோதனை தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பது குறித்த தகவல்களை வழங்குவதை நோக்கமாக வைத்துள்ளதாக பிஃபிஸிர்ஸ் (Pfizer's)நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்