'அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே'... 'அதன் தடுப்பூசிக்கு முந்திக்கொள்ளும் நாடு?!!'... 'இந்த வாரத்திலேயே வரவுள்ள ஹேப்பி நியூஸ்!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா  தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பே, வேறு நாட்டில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே'... 'அதன் தடுப்பூசிக்கு முந்திக்கொள்ளும் நாடு?!!'... 'இந்த வாரத்திலேயே வரவுள்ள ஹேப்பி நியூஸ்!!!'...

அமெரிக்காவில் தயாராகும் பைசர் மற்றும் பயான்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி  95% பலனைத் தருவதாக கடந்த வாரம் பெரும் நம்பிக்கை தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு தடுப்பூசி தொடர்பாக முடிவெடுக்க, டிசம்பர் 10ஆம் தேதிவாக்கில் கூட உள்ளதால், இப்போதிருக்கும் சூழலை கணக்கிடும்போது ஒப்புதலுக்குப் பின் டிசம்பர் 11 அல்லது 12ஆம் தேதி போல அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Pfizer Covid-19 Vaccine Could Get UK Approval This Week Before US

அதேநேரம் அந்த தடுப்பூசி தற்போது அமெரிக்கர்களுக்கு கிடைப்பதற்கு முன்னாலேயே இங்கிலாந்து மக்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இங்கிலாந்தில் அமெரிக்காவிற்கு முன்பாக டிசம்பர் முதல் வாரத்திலேயே பைசர் தடுப்பூசி போடுதல் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pfizer Covid-19 Vaccine Could Get UK Approval This Week Before US

இதுகுறித்து டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியில், பிரிட்டிஷ் உணவு மற்றும் மருந்துகள்  கட்டுப்பாட்டாளர்கள் அமெரிக்காவின் பைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின்  முறையான மதிப்பீட்டைத் தொடங்க உள்ளனர் எனவும், டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அதை நிர்வகிக்க தேசிய சுகாதார சேவைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்த மாத துவக்கத்திலேயே தடுப்பூசி போட தயாராக இருக்கும்படி அந்நாட்டு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துவிட்டால் இது சாத்தியம் எனவே கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்