‘தனி ஆளாக யூடியூப் சேனல் மூலம் அதிக வருமானம்’!.. திடீரென ஓய்வை அறிவித்த பிரபல யூடியூபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் யூடியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெல்பெர்க் (Felix Kjellberg) ஓய்வு எடுக்க விரும்புவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘தனி ஆளாக யூடியூப் சேனல் மூலம் அதிக வருமானம்’!.. திடீரென ஓய்வை அறிவித்த பிரபல யூடியூபர்..!

சுமார் 102 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களுடன் உலகின் நம்பர் ஒன் யூடியூப் சேனலாக  ‘ப்யூடைபை’ (PewDiePie) என்ற சேனல் இருந்தது. இதை 30 வயதான ஃபெலிக்ஸ் ஜெல்பெர்க் என்ற இளைஞர் நடத்தி வந்தார். ஆன்லைன் வீடியோ கேம் விளையாடுவதை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோ கேம் மூலமாகவே சர்வதேச அளவில் பிரபலமடைந்தவர். மேலும் யூடியூப் சேனல் மூலம் தனியொரு நபராக அதிக வருமானம் ஈட்டியவராக அறியப்பட்டவர்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டில் இருந்து யூடியூப் தளத்தில் இருந்து இடைவேளை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மிகவும் சோர்வாக உணர்வதால், ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்திய ஆல்பம் சேனலான டி-சீரிஸ் (T-Series) 121 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்று ப்யூடைபை யூடியூப் சேனலை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

FELIXKJELLBERG, PEWDIEPIE, YOUTUBE