அட, என்னங்க சொல்றீங்க...! '14 மாசமா இந்த மது பூமியிலேயே இல்ல...' 'இப்போ தான் பூமிக்கு வந்திருக்கு...' 'விஷயத்தை கேள்விப்பட்ட உடனேயே...' - வந்து குவியும் வாடிக்கையாளர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளி நிலையத்தில் சுற்றி திரிந்த ஒயின் பாட்டில் சுமார் 1 மில்லியன் டாலர் வரை விற்கப்படும் என கிறிஸ்டி என்ற நிறுவனம் கூறியுள்ளது.
கிறிஸ்டியன் ஒயின் மற்றும் ஸ்பிரிட்ஸ் அமைப்பு, கடந்த நவம்பர் 2019ஆம் ஆண்டு 12 பாட்டில்களை விண்வெளிக்கு அனுப்பியது. இதுபோன்ற ஒயின் பாட்டில்கள், கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு மிகவும் நுட்பமாகவும், ருசியாகவும் இருப்பதாக இதை ருசித்துப் பார்த்த பிரான்ஸ் மது வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரஸ் 2000 என்ற அந்த மது பாட்டில் 1 மில்லியன் டாலர் வரை ஏலத்தில் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கூறிய கிறிஸ்டியன் ஒயின் மற்றும் ஸ்பிரிட்ஸ் அமைப்பின் சர்வதேச இயக்குனர் டிம் டிப்ட்ரீ, 'எங்களுடைய இந்த விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மது பாட்டில்கள், விண்வெளி நிலையத்தில் பூஜ்ஜிய ஈர்ப்புக்கு அருகில், ஒரு தனித்துவமான சூழலில் முதிர்ச்சியடைகிறது. அதனால் இவை விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு இது இன்னும் ஒரு சிறந்த மது பாட்டிலாக மாறியுள்ளது.
அதோடு பூமியில் 2000 பெட்ராஸ் மது பாட்டில்களை பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். அதனால் விண்வெளியில் இருந்த வந்துள்ள மதுவை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என எண்ணப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், விண்வெளிக்குச் சென்ற டஜன் கணக்கான பல பாட்டில்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அவற்றில் எதையும் விற்க எந்த திட்டமும் இல்லை எனவும் டிப்ட்ரீ கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்