'நாய்க்குட்டி'னு நம்பி தான் சார் 'பாசமா' வளர்த்தேன்...! கடைசியில இப்படி ஒரு 'ஷாக்' கிடைக்கும்னு எதிர்பார்க்கல...' 'அதோட 'முகம்' மாறினப்போ...' - 'அதிர்ந்து' போன உரிமையாளர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மரிபெல் சோடெலோ, என்ற நபர் ஒருவர் பெருவில் வசித்து வருபவர். நீண்ட நாட்களாக, இவருக்கு நாய் வளர்க்க வேண்டும் என விரும்பியுள்ளார்.

'நாய்க்குட்டி'னு நம்பி தான் சார் 'பாசமா' வளர்த்தேன்...! கடைசியில இப்படி ஒரு 'ஷாக்' கிடைக்கும்னு எதிர்பார்க்கல...' 'அதோட 'முகம்' மாறினப்போ...' - 'அதிர்ந்து' போன உரிமையாளர்...!

எனவே, நாய் குட்டி ஒன்றை வாங்க வேண்டும் என்று முடிவு செய்த அவர், பெரு நாட்டில் உள்ள மத்திய லிமாவில் இருக்கும் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு பல நாய் குட்டிகளை பார்த்த அவர், தனக்கு பிடித்தமான ஒரு அழகான நாய்க்குட்டியை வாங்கி சென்றுள்ளார்.

அப்போது அந்த கடைக்காரர், இந்த நாய் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்தது என்று கூறி அதிக விலைக்கு விற்றுள்ளார். மரிபெல் சோடெலோ, ஆசையாக வளர்க்க தொடங்கிய நிலையில், அந்த நாய் குட்டிக்கு "ரன் ரன்" என பெயரிட்டுள்ளார். இது குறித்து நாய் குட்டியின் உரிமையாளர் மரிபெல் சோடெலோ, கூறுகையில், அது வளரத் தொடங்கியவுடன் அந்த  நாய்க்குட்டி அருகிலுள்ள கோழிகள் மற்றும் வாத்துகளைக் கொன்று தின்னத் தொடங்கியது.

நாட்கள் செல்ல செல்ல, அதன் தோற்றம் மாறி, அதன் கால்கள் மெல்லியதாகவும், அதன் வால் புதர் போன்றும், அதன் தலை கூர்மையாகவும், அதன் காதுகள் மேல்நோக்கியும் மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் 3 பெரிய பன்றிகளை இந்த நாய் சாப்பிட்டு விட்டது.

இது நாய் என்று தெரிந்து தான் 13 டாலர் பணம் கொடுத்து வாங்கினோம். அருகாமையில் வசிப்பவர்களின் விலங்குகளைத் தாக்குவதாக அண்டை வீட்டுக்காரர்கள் புகார் அளித்த பின்னரே, 'ரன் ரன்' ஒரு ஆண்டியன் (Andean) வகை நரி என்று தெரிய வந்தது.

இறுதியாக, ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, பெருவின் செர்ஃபோர் வனவிலங்கு சேவை, 'ரன் ரன்' இந்த வார தொடக்கத்தில் வேட்டையாடாமல் அமைதியடைந்ததாகவும், கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்க பட்ட பின்னர் பார்க் டி லாஸ் லேயெண்டாஸ் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 

FOX, PUPPY, DOG, PERU

மற்ற செய்திகள்