எல்லாமே ‘23 வயசு’ வரைதான்..! அமெரிக்க ‘ஸ்டான்போர்டு’ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு.. வெளியான ‘ஷாக்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மனிதர்கள் நகைச்சுவை உணர்வு தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நகைச்சுவையும், சிரிப்பும் மனித மனங்களிடத்தில் உள்ள சோகத்தை அழித்து மகிழ்ச்சி பூக்களை மலரச் செய்கின்றன. இந்தநிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. உலகம் முழுவதும் 166 நாடுகளில் சுமார் 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 23 வயதில் இருந்து மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. அதற்கு காரணம் அந்த வயதில் இருந்துதான் அவர்கள் வேலைக்கு செல்லத் தொடங்குகின்றனர். இதுகுறித்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஜெனிபர் ஆக்கர், பேராசிரியர் நவோமி பாக்டோனஸ் ஆகியோர் ஆய்வறிக்கை ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், ‘நாம் வேலைக்கு செல்லும்போது திடீரென தீவிரமான மற்றும் முக்கியமானவர்களாக ஆகிவிடுகிறோம். அங்கு சிரிப்பை வணிகத்துக்காகவும், வேலைக்காகவும் பயன்படுத்துகிறோம்’ என பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 4 வயது குழந்தை ஒரு நாளில் 300 முறை சிரிக்கிறது. ஆனால் 40 வயது மனிதர் 10 வாரங்களில் 300 முறை சிரிக்கிறார் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் பணியிடங்களில் நகைச்சுவை உணர்வை எப்படி பயன்படுத்த வேண்டும் என பேராசிரியர்கள் இருவரும் தங்களது மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்