'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா?'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உணவு பேக்கிங் மூலம் கொரோனா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் சீனாவின் இரண்டு நகரங்களுக்கு பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனிலும், அதன் பேக்கேஜிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "கொரோனா வைரஸ் உணவு, பேக்கேஜிங், சமைப்பது, அதை டெலிவரி செய்வது ஆகியவற்றின் மூலம் என எந்த வகையிலும் பரவாது. எனவே மக்களிடம் இந்த அச்சம் தேவையில்லை. அவ்வாறு பரிசோதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உணவுப் பார்சல்கள் மூலம் இதுவரை 10க்கும் குறைவானவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்