'என்னோட பொண்ண காப்பாத்துங்க'...'சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்'.... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி மத வெறித் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்,அவரின் சிகிச்சைக்கு பலரும் நிதியுதவி செய்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி த்ரிதிவியின் குடும்பம் கடந்த, ஏப்ரல் 23-ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் பகுதியில் சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் த்ரிதியின் தந்தை மற்றும் அண்ணன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஆனால் 7ஆம் வகுப்பு பயிலும் த்ரிதி நாராயனன் மட்டும், தலையில் பலத்த காயங்களுடன் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தல்ல,திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என்னும்,பகீர் தகவல் தெரியவந்தது.த்ரிதியின் ஓட்டுமொத்த குடும்பத்தின் மீதும் திட்டமிட்டு கார் ஏற்றப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் த்ரிதியின் மருத்துவ செலவிற்கு 5,00,000 அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என மருத்துவர்கள்,கூற அவரது குடும்பம் பணத்தை திரட்டும் முயற்சியில் இறங்கினார்கள்.அதற்காக கோபண்டுமீ இணையத்தில் ஓர் இணையப் பக்கம் உருவாக்கப்பட்டது.அதில் 'த்ரிதி பிழைத்துக்கொள்ள எங்களிடம் வேண்டுதல்கள் இருந்தும்,போதுமான பணம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் த்ரிதியின் நிலையை உணர்ந்த பலரும் அவரின் மருத்துவ செலவிற்காக தங்களால் முடிந்த பணத்தை அனுப்ப தொடங்கினார்கள்.இதுவரை 12,360 பேர் அளித்த பணத்தில், 6,00,000 அமெரிக்க டாலர்கள் அந்த இணையத்தின் மூலமாக திரட்டப்பட்டது.இதனிடையே இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், த்ரிதி மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என எண்ணி இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.இதனிடையே சிறுமியை காப்பாற்ற பலரும் உதவி செய்த சம்பவம்,அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.