இது நாயா? பூனையா?.. நெட்டிசன்களை குழப்பும் புகைப்படங்கள்.. உண்மையை வெளியே சொன்ன உரிமையாளர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பார்ப்பதர்க்கு பூனை போலவே இருக்கும் வித்தியாசமான நாயின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இணைய தளங்களில் எப்போதும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு பஞ்சம் இருப்பதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற விஷயங்களை தேடி தேடி அறிந்துகொள்ளும் மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அந்த வகையில் பார்க்க பூனை போலவே இருக்கும் நாயின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
வித்தியாசமான நாய்
வியட்நாம் நாட்டின் ஹனாய் பகுதியை சேர்ந்த ஹாய் அன் மற்றும் துவான் தம்பதி Dúi என்னும் நாயினை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் பூர்வீக பழங்கால இனமான ஹ்மாங் மற்றும் குட்டை கால் இனமான டிங்கோ உள்ளிட்ட அரிய இனங்களின் கலவை ஆகும். இதனால் Dúi பூனை போன்ற உடலமைப்பும் நீளமான உடலையும் கொண்டிருக்கிறது. இதனை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை ஆன்லைனில் அவ்வப்போது பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது இந்த தம்பதி. ஆனால், நெட்டிசன்கள் பலரும் இதனை பூனை என்றே நினைப்பதாக சொல்கிறார்கள் இந்த தம்பதியினர். இந்த நாயின் புகைப்படத்தை முதன் முதலில் 2 வருடங்களுக்கு முன்னதாக சமூக வலை தளத்தில் பதிவிட்டிருக்கிறார் துவான். அப்போது இதனை ஆங்கில பூனை வகையை சேர்ந்தது என பலர் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.
அதிர்ஷ்ட நாய்
இதுகுறித்து பேசிய துவான்," எங்களுடைய அதிர்ஷ்ட நாய் Dúi பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பார்க்க பூனை போல இருந்தாலும் இது நாய்தான். தற்போது 2 வயதான Dúi -க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்" என்றார். இந்த நாய்க்கென பேஸ்புக் பக்கம் ஒன்றையும் துவங்கியுள்ளார் துவான். அதில் 24,000 பேர் இந்த நாயினை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
வியட்நாம்-ன் Dúi போலவே உலகில் அதிக மக்களால் ஈர்க்கப்பட்ட நாய் சிஹுவாவா பார்டோ ஆகும். இதை பிரிட்டனின் மிகச்சிறிய நாய் என்று மக்கள் அழைக்கிறார்கள். இருப்பினும் இதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. பார்டோ 8 அங்குலம் உயரமும் 2 அங்குல அகலமும் கொண்டது. 1.35 கிலோ எடைகொண்ட இந்த நாயை பிரிட்டனை சேர்ந்த ஜான் மல்லன் மற்றும் அவரது சகோதரி ஆன் ஆகியோர் வளர்த்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்