'அறிவிப்பு' வந்த உடனே 'பாஸ்போர்ட்' அலுவலகத்தில் குவிந்த ஆப்கான் மக்கள்...! - இரவு பகல் பாராமல் 'நீண்ட' வரிசையில் காத்திருப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகளுக்கு செல்லும் பாஸ்போர்ட் வழங்கும் துறை தொடங்கியுள்ளதால் அங்கு வரிசையாக மக்கள் நிற்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

'அறிவிப்பு' வந்த உடனே 'பாஸ்போர்ட்' அலுவலகத்தில் குவிந்த ஆப்கான் மக்கள்...! - இரவு பகல் பாராமல் 'நீண்ட' வரிசையில் காத்திருப்பு...!

ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கை இன்றளவும் திரும்பவில்லை. அதோடு தாலிபன்களும் நாங்கள் திருந்திவிட்டோம் முன்பு போல் இல்லையென்று கூறி வந்தாலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் அங்கு வசிக்கும் மக்களுக்கு உகந்ததாக இல்லை.

தாலிபான் ஆப்கானை கைப்பற்றிய பின் சில நாட்கள் தங்கள் நாட்டிலிருந்து படைகள் வெளியேற அனுமதி அளித்திருந்தது. அப்போது ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். தற்போது வரை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருவதால் பொதுமக்கள் ஒருவித பீதியுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

People congregate at passport office to leave Afghanistan

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பலர் ஆப்கானை விட்டு வெளியேற முடிவு செய்து  விண்ணப்பத்தோடு காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு திரண்டனர்.

இந்த அறிவிப்பு வெளிவந்த அன்றிலிருந்தே பலர் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தில் 99 சதவீதம் மருத்துவ சிகிச்சைக்காக மற்ற நாடுகளுக்கு செல்வதாக குறிப்பிட்டு இருந்தனர்.

அதோடு, நோயாளிகள் சிலர் ஆம்புலன்ஸ் வேனுடன் பாஸ் போர்ட் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். இதில் 60 வயது முகமது உஸ்மான் என்பவரும் ஒருவர். இதுக்குறித்து கூறிய அவர் 'எனக்கு வயது 60, நான் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போது மருத்துவர்கள் அவசரமாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறியதால் நான் பாகிஸ்தான் நாட்டுக்கு உடனடியாக செல்ல வேண்டும். அதற்காக விண்ணப்பம் கொடுக்க வந்துள்ளேன்' எனக் கூறினார்.

இதனால் ஆப்கான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தற்போது ஆப்கானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PASSPORT, AFGHANISTAN, பாஸ்போர்ட், ஆப்கானிஸ்தான்

மற்ற செய்திகள்