'கற்பூரவள்ளி, ரஸ்தாளி பார்த்திருப்போம்'... 'இதுவேற லெவல் டேஸ்ட்'... நீல நிற வாழைப்பழம் குறித்த சுவாரசிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
எந்த சீசனிலும் எப்போதும் கிடைக்கும் ஒரு சத்தான பழம் தான் வாழைப்பழம். அதிக ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழத்தைச் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது என்று கூட கூறலாம். இந்த வாழைப் பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை, மலை வாழைப்பழம், நேந்திரன் வாழைப்பழம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கிடைக்கும் மட்டி வாழைப்பழம் என பல வகைகள் உண்டு.
செவ்வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலைக் கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சரியம். தற்போது இந்த பழத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவை வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும். இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதானவை. அவை எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை.
இந்த வாழைப்பழங்கள் பழுத்தவுடன், அவை பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும். இந்த வகை வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன. அதேபோல அவை ஹவாயிலும் நன்கு வளரக்கூடியவை ஆகும். இந்த பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.
சுவாரஸ்யமாக, இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியைத் தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 40F ஆகும். சமீபத்தில், ட்விட்டர் யூசர் தாம் கை மெங் என்பவர் தான் இந்த அரியவகை வாழைப்பழம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இந்த வாழைப்பழங்களில் மற்ற வகைகளைப் போலவே நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. இதனுடன் சேர்த்து, அவற்றில் சில அளவு இரும்பு, பாஸ்பரஸ், தியாமின் மற்றும் செலினியம் ஆகியவையும் அடங்கியுள்ளன.
How come nobody ever told me to plant Blue Java Bananas? Incredible they taste just like ice cream pic.twitter.com/Aa3zavIU8i
— Khai (@ThamKhaiMeng) March 24, 2021
மற்ற செய்திகள்